AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
26 May 19, 06:00 PM
கால்நடை வளர்ப்புகால்நடை அறிவியல் மையம், ஆனந்த் விவசாயப் பல்கலைக்கழகம்.
கன்று ஈனும் காலத்திற்கு முன்பு விலங்குகளின் முறையான பராமரிப்பு
கன்று ஈனுவதற்கு முந்தைய காலகட்டத்தில் விலங்குகளைப் பராமரிப்பது எதனால் அவசியமாகிறது? கறவை விலங்குகளான பசுக்கள் மற்றும் எருமைகள் போன்றவற்றை 13 அல்லது 14 மாதங்களுக்குள் கன்று ஈனச் செய்யவேண்டும். இதற்கு, கன்று ஈன்ற 3-4 மாதங்கள் கழித்து, கருவூட்டப்பட்ட 1-2 முறைகளுக்குள் கருவுற வேண்டும். கன்று ஈனும் காலகட்டத்திலான கடைசி மூன்று மாதங்கள் 1. விலங்குகளை தண்ணீரில் அதிக நேரம் விடக்கூடாது. மேலும் அதனை மலைப்பகுதிகளிலோ, கரடுமுரடான பகுதிகளிலோ விடக்கூடாது. ஏனென்றால், கருப்பையில் ஏற்படும் இயக்கங்கள் காரணமாக விலங்குகளின் அது இனப்பெருக்கப் பாதை அல்லது கருப்பையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும் இதனால் பிரசவம் செய்வதில் பிரச்சினை ஏற்படலாம் அல்லது தாய்-குட்டி இரண்டும் இறந்து போவதற்கும் வாய்ப்புள்ளது. 2. வயிற்று உப்பிசத்தை ஏற்படுத்தும் உணவுகளை விலங்குகளுக்கு கொடுக்கக்கூடாது. 3. பேறுகாலத்துக்கு முந்தைய காலகட்டத்தில் பிதுக்கம் ஏற்பட்டால் (அதாவது, பிரசவத்திற்கு முன்பு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறுநீரக கட்டமைப்புகளின் வெளியே பிதுக்கம் காணப்பட்டால்), அந்த விலங்கை கால்நடை மருத்துவரிடம் கூட்டிச் சென்று அவரின் ஆலோசனையின்படி அதனைப் பராமரிக்க வேண்டும். 4. இதற்கு முன்பு ஏற்கனவே ஒரு விலங்கில் பேறுகாலத்துக்கு முந்தைய பிதுக்கம் ஏற்பட்டிருந்தால், அதன் முன்பக்கமுள்ள கால்கள் சரிவில் இருக்கும் வகையில் அதனைக் கட்டவேண்டும்
5. பேறுகாலகட்டத்தின் கடைசி மூன்று மாதங்கள், பசுக்களுக்கும்-எருமைகளுக்கும் மிகவும் முக்கியமானது. அவை தன்னையும் சேர்த்து, தனது கருவிலிருக்கும் குட்டிகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே, இந்தக் காலகட்டத்தில் ஊட்டச்சத்துள்ள உணவு (தாது உப்பு, உலர் வைக்கோல் மற்றும் உப்புக் கலவை) போதுமான அளவு தேவை. மேலும் கால்நடைகளைப் பராமரிக்கும் இடத்தை சுத்தமாக இருக்க வேண்டும் மற்றும் விளங்குகளுக்குத் தேவையான சிறப்புச் சிகிச்சைகளை வழங்க வேண்டும். குறிப்பு: கால்நடை அறிவியல் மையம், ஆனந்த் விவசாயப் பல்கலைக்கழகம். இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
583
16