Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
01 Jul 19, 11:30 AM
ஆலோசனைக் கட்டுரைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
நாம் ஒரு விவசாய நாட்டில் வாழ்ந்து வருகிறோம்!
இந்தியாவில் விவசாயம் குறித்து எழுகின்ற எந்தவொரு விவாதத்திலும், ‘இந்தியா ஒரு விவசாய நாடு’ என்றே உறுதியாகக் கூறப்படுகிறது. இது எல்லாத் தலைமுறையின் மக்களாலும் மதிக்கப்படும் ஒரு கூற்று. எனினும், விவசாயப் பொருளாதாரத்தை ஒருவர் எவ்வளவு ஆழமாக உணர்வார் என்பதை சமீபத்தில் ஐரோப்பாவில் நான் உணர்ந்தேன். நானும் என் சகஊழியரும் பயிற்சிக்காக ஐரோப்பாவிலுள்ள நெதர்லாந்திற்குச் சென்றிந்தோம். அங்கு ஒருவாரம் தங்கியிருந்தோம். அங்கு பல விஷயங்களைப் பார்க்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. விவசாயத்திலான சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிக்காக நாங்கள் சென்றிருந்ததால், விவசாய நிபுணர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பை நாங்கள் பெற்றோம். அவர்களுடனான உரையாடல்களின் மூலம், டச்சு நாட்டு மக்கள் ஒழுக்கமானவர்கள், அமைதியானவர்கள் மற்றும் வேலை செய்ய விரும்புபவர்கள் என்பதை நான் அறிந்துகொண்டேன். பயிற்சியின் கடைசி நாளன்று, நாங்கள் ஒரு ஐந்து நட்ச்சத்திர ஹோட்டலுக்குச் சென்றிருந்த போது அங்கு ஒரு போர்டு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். அங்கு குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தைகள் என் மனதைத் தொட்டு, என் மனதில் ஒருசில கேள்விகளை எழுப்பின. அந்த போர்டில், “இந்தக் காலையுணவு டச்சு (ஐரோப்பிய) விவசாயிகள் மற்றும் அவர்களின் சமூகங்களுக்கு உதவிடும்” என்று எழுதியிருந்தது. மேலும் அந்த போர்டைச் சுற்றிலும் தனித்தனி பாத்திரங்களில் பழங்கள், தக்காளி, வெள்ளரி சாலட், கீரை மற்றும் (தயிர், மோர், வெண்ணெய் போன்ற) பல்வேறு பால் சார்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுடன் பல்வேறு பழங்கள், தேன் மற்றும் பிற பொருட்களும் இருந்தன. “இங்கு வைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் உள்ளூரில் விளைவிக்கப்பட்டவை. இவற்றில் செயற்கை சர்க்கரை பயன்படுத்தப்படவில்லை மற்றும் எல்லா பேக்கேஜிங்கும் சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக உருவாக்கப்பட்டவை” என்றும் அங்கு எழுதப்பட்டிருந்தன. மேலும் அந்தப் பொருட்களை கொள்முதல் செய்த பண்ணையின் சார்பாக சில வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தன. “தங்களின் குடும்பத்தை விட்டுத் தொலைவில் வேலை செய்கின்ற நபர்களுக்காக நாங்கள் இடங்களை உருவாக்கித் தருகிறோம். தங்களின் வேலையை விரும்புகின்ற நபர்கள் நிறைய அர்ப்பணிப்புடன் இருப்பர். மேலும் சுவையான நல்ல தரத்திலான உணவை எங்கள் வாடிக்கையாளர்களுக்காகச் சமைத்துத் தருவர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அடிக்குறிப்பாக, ஆரோக்கியமான உணவு, விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்கு இடையே வலுவான உறவு உள்ளதையும், அது என்றும் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் அறுத்த தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது. நண்பர்களே, இது சிறிய வாக்கியமாக இருந்தாலும், சமூகத்தில் விழிப்புணர்வை எழுப்பக்கூடியதாக உள்ளது. இதனை வாசித்த போது, நமது நாட்டில் நுகர்வோர்களுகள் மற்றும் விவசாயிகளுக்கான உரிமைகள் அல்லது நீதி மிகவும் குறைவாக உள்ளதாக நான் உணர்ந்தேன். எனவே, நாம் உண்மையில் விவசாய நாடுதானா? ஒரு நாடாக நாம் கணக்கற்ற யோசனைகளைக் கொண்டிருந்தாலும், இந்தச் சிந்தனைகளைச் சரிவர செயல்படுத்துகிறோமா? நமது விவசாய நிலங்களில் விளைவிக்கப்படுபவை உண்மையிலேயே பாதுகாப்பானதா, ஆரோக்கியமானதா? நாம் நச்சுள்ள பொருட்களை விளைவிக்கிறோமா? விவசாயப் பொருட்களை நாம் மதிக்கிறோமா? பெரிய மால்களில் விலையுயர்ந்த உடைகள், ஷூக்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை வாங்கும் நாம், நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளிடம் விலையைக் குறைக்கும்படி பேரம் பேசுகிறோம், இல்லையா? இந்தச் சூழல்களைக் கருத்தில் கொள்ளும்போது, நம்மிடம் மாற்றம் தேவையா அல்லது வெறுமனே நாம் விவசாய நாடு என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளவேண்டுமா? இது இரண்டு வகையான மக்களுக்குப் பொருந்தும்; முதல் வகையினர், இந்தியா ஒரு விவசாய நாடு என்று ஏற்கின்ற நபர்கள். இவர்கள் உண்மையில் ஒரு விவசாய நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டாவது வகையினர், இந்தியாவை ஒரு விவசாய நாடாக ஏற்காத மக்கள். இந்த இரண்டு வகையினருக்கும் இந்தக் கட்டுரை உதவிகரமாக இருக்கும். ஆதாரம்: தேஜாஸ் கோல்ஹே, மூத்த வேளாண் விஞ்ஞானி அக்ரோஸ்டார் சென்டர் ஆஃப் எக்செலன்ஸ்
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
391
0