Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
22 Apr 19, 10:00 AM
ஆலோசனைக் கட்டுரைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
பாதுகாக்கப்பட்ட விவசாயக் சாகுபடி
பாலிதீன்கூடம் என்றால் என்ன? பாலிதீன்கூடம் அல்லது பசுமைக்குடில் என்பது கண்ணாடி அல்லது பாலிதீன் போன்ற ஒளிகசியும் பொருள் கொண்ட ஒரு வீடு அல்லது கட்டுமானம் ஆகும், அங்கு கட்டுப்படுத்தப்பட்ட பருவ நிலைமைகளின் கீழ் தாவரங்கள் வளர்ந்து மற்றும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. சிறிய குடிசையிலிருந்து பெரிய அளவிலான கட்டிடங்கள் வரை அவரவர்களின் தேவைக்கேற்ப கட்டமைப்பின் அளவு வேறுபடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பசுமைக்குடில் ஒரு கண்ணாடி இல்லம் ஆகும், இந்த பசுமைக்குடிலில் சூரிய வெளிச்சம் காரணமாக அதன் வாயு வெளியேறுவது நிறுத்தப்பட்டுவிடுவதால், அதன் உட்புறம் வெப்பமடைகிறது . எனவே, அது வெளியே குளிராக இருக்கும் போதும், உள்ளே வெப்பநிலை தாவரங்ககளுக்கு வளருவதற்கு தகுந்ததாகவும் மற்றும் நட்பார்ந்த சூழலாகவும் உள்ளன.
பசுமைக்குடில் மற்றும் பாலிதீன்கூடத்திற்குமுள்ள வித்தியாசம்  பாலிதீன்கூடமானது பசுமைக்குடிலின் ஒரு வகை ஆகும் அல்லது இது பசுமைக்குடிலின் ஒரு சிறிய பதிப்பு என்றும் நாம் சொல்லலாம், அங்கு பாலிதீன்கள் மேலுறைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.  இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பாலிதீன்கூடங்கள் அதன் குறைந்த செலவு கட்டுமானம் மற்றும் எளிதான பராமரிப்பு காரணமாக. பண்ணைகளில் ஒரு பிரபலமான பசுமைக்குடில் தொழில்நுட்பமாக விளங்குகிறது.  மரச்சட்டங்களைப்பயன்படுத்தி மேல்கூரைகளாகச் செய்யப்படும் லேத் வீடும் ஒரு பசுமைக்க்குடில் தொழில்நுட்பம் ஆகும்.  பாலிதீன்கூடத்தை பசுமைக்குடில் உடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானது ஆனால் பின்னர் சொல்லப்பட்ட பசுமைக்குடில் பாலிதீன்கூடத்தை விட நீண்ட காலம் வலிமைமிக்கதாக இருக்கும். பாலிதீன்கூடத்தில் தாவரங்கள் பயிரிடப்படுகின்றது  பப்பாளி, ஸ்ட்ராபெரி முதலிய பழங்கள் அங்கு வளரக்கூடியவைகளாகும்.  முட்டைக்கோஸ், பாகற்காய், குடைமிளகாய், முள்ளங்கி, காலிபிளவர், மிளகாய், மல்லி, வெங்காயம், கீரை, தக்காளி முதலியவைகள் வளர்க்கக்கூடிய காய்கறிகளில் அடங்கும்.  கார்னேசன், கெர்பரா, மேரிகோல்டு, ஆர்க்கிட் மற்றும் ரோஸ் போன்ற மலர்களையும் எளிதில் வளர்க்கலாம். மூலம்: கிருஷி ஜாக்ரன் இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
315
1