AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
03 Jun 19, 10:00 AM
ஆலோசனைக் கட்டுரைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
சூரிய ஒளிப் பொறி - ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்
ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு (IPC) எனவும் அறியப்படுகின்ற ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகமானது (IPM), பொருளாதார ரீதியான பூச்சிக் கட்டுப்பாடு நடைமுறைகளை ஒருங்கிணைக்கின்ற ஒரு அணுகுமுறை ஆகும். இதில், பல்வேறு வகையான பொறிகளைப் பயன்படுத்தி பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. பூச்சிகளைக் கவர்ந்திழுப்பதற்கு ஒளிப் பொறிகளைப் பயன்படுத்தலாம். இது எல்லா வகையான பூச்சிகளையும் கட்டுப்படுத்திடும். ஒளிப் பொறிகளின் நன்மைகள் 1) இரவு நேரங்களில், வயதுவந்த பூச்சிகள் ஒளியை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. இதே நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பிரத்யேக விளக்கு பல்பின் மூலம் பூச்சிகள் கவர்ந்திழுக்கச் செய்யப்படுகின்றன. 2) மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இந்த பல்பு ஒளியால் பூச்சிகளைக் கவர்ந்திழுக்க முடியும். அந்த விளக்கின் கீழ் ஒருதட்டின் மீது பூச்சிக்கொல்லி கரைசல் அல்லது மண்ணெண்ணெய் வைக்கப்படுகிறது. இதன் விளைவாக பூச்சிகள் அந்தக் கரைசலினுள் விழுந்து கட்டுப்படுத்தப்படுகின்றன. 3) இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி மீண்டும் தொடங்கிய பின்பு, இந்தப் பூச்சிகளை அவற்றின் வயதுவந்த நிலைகளின் போது கட்டுப்படுத்த முடியும். வயதுவந்த பருவத்தின் போது, அவற்றைக் கொல்வதன் மூலம் நீண்டகாலத்திற்கு பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். கட்டுப்படுத்த முடியக்கூடிய பூச்சிகள் 1. வெள்ளைப் பூச்சிக் குடம்பி, வயதுவந்த அந்துப்பூச்சிகள் மற்றும் திராட்சை, மாம்பழம் மற்றும் பிறவற்றில் காணப்படும் பூச்சிகள் போன்றவற்றை இந்தப் பொறி கவர்ந்திழுத்திடும். 2. ஜூன் மாதத்தில் பருவமழையின் தொடக்கத்தில் பெரும்பாலான பூச்சிகளை அவற்றின் வயதுவந்த பருவத்தில் கட்டுப்படுத்திட முடியும். ஒளிப் பொறிகளைப் பயன்படுத்துவதிலான சிரமங்கள் 1) மின்சாரத் தடைகள் காரணமாக கிராமப்புறப் பகுதிகளில் ஒளிப் பொறிகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது. மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை ஒளிப் பொறிகளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதில் சவால்கள் உள்ளன. 2) பருவமழைக் காலத்தின் போது ஒளிப் பொறி முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. மழைக் காலத்தின் போது, மின் இணைப்புகளில் நிறைய பிரச்சினைகள் ஏற்படும். மழையின் காரணமாக பல்பை அடிக்கடி பராமரிக்க வேண்டியிருக்கும். 3) இதற்கான தீர்வாக ஒரு ஏக்கர் அளவுள்ள நிலத்தில் ஒரு சோலார் ஒளிப் பொறியை அமைக்கலாம். சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பு இந்த ஒளிப் பொறிகள் தானாகச் செயல்படத் தொடங்கி தொடர்ந்து 4 மணிநேரம் எரியும். ஆதாரம்: அக்ரோஸ்டார் அக்ரோனாமி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
584
0