Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
12 May 19, 06:00 PM
கால்நடை வளர்ப்புகாவ் கனெக்ஷன்
கோடையின் வெப்ப அலைகளிலிருந்து விலங்குகளைக் காப்பாற்றவும்
கோடை காலத்தில், விலங்குகளை பராமரிப்பவர் விலங்குகளின் மீது கூடுதல் கவனத்தை செலுத்தவேண்டும். இந்த நேரத்தில், விலங்குகள் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலைகள் மூலம் பாதிக்கப்படுகின்றன. வெப்ப அலை காரணமாக, விலங்குகளின் தோல் சுருங்குகிறது மற்றும் கறவைக்குரிய கால்நடையியலில் பால் உற்பத்தி குறைகிறது. விலங்கு பராமரிப்பாளர்களால் சரியான நேரத்தில் விலங்குகளுக்குச் சிகிச்சை அளிப்பதன் மூலம் அவைகளைக் காப்பாற்ற முடியும்.விலங்குகள் மிக மோசமான நிலையில் இருந்தால், உடனடியாக கால்நடை மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள். அறிகுறிகள் விலங்குகள் வெப்ப அலை மூலம் பாதிக்கப்படுகின்ற போது, அவை 106 முதல் 108 டிகிரி உயர்ந்த காய்ச்சலுக்கு ஆளாகிறது. கால்நடைகள் மந்தமாக மாறுகிறது மற்றும் சாப்பிட அக்கறையும் காட்டவில்லை. அதன் நாக்கு வாயிலிருந்து வெளியே வருகிறது, அது சுவாப்பதில் சிரமங்களை ஏற்படுத்துகிறது. அதன் வாயைச்சுற்றி நுரை ஏற்படுகிறது.
சிகிச்சை ● இந்த பருவத்தில், விலங்குகளுக்கு பெரும்பாலும் அதிக தாகம் எடுக்கின்றன. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று முறை விலங்களுக்கு தண்ணீர் கொடுங்கள், இதனால் உடல் வெப்பநிலை கட்டுப்படுத்தப்படுகிறது. ● இது தவிர, உப்பு மற்றும் சிறிதளவு மாவைத் தண்ணீரில் கலந்து குடிக்க கொடுக்கவேண்டும். ● சுத்தமான காற்றோட்டத்தைப்பெறுவதற்காக கால்நடைகளின் கொட்டகையின் உள்ளே சரியான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். ● கோடை காலத்தில், கால்நடைகளை குளிப்பாட்டவேண்டும், குறிப்பாக எருமைகளை குளிர்ந்த நீரில் குளிப்பாட்டடவேண்டும். ● விலங்குகளுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்கக் கொடுக்கவேண்டும். ● விலங்குகள் ஒரு தகரம் அல்லது குறைந்த உயர கூரையின் கீழ் வைத்திருக்கக் கூடாது. ● விலங்குகளுக்கு பசுமையான தீவனம் கொடுக்கவேண்டும் மற்றும் பசுந்தீவனம் மற்றும் சத்தான உணவை அதிக சக்தியைத் தருகிறது மற்றும் அதில் 70-90 சதவிகிதம் தண்ணீர் கொண்டுள்ளது, இது அவ்வப்போது தங்களின் உடலில் நீர் அளவைப் பராமரிக்க உதவுகிறது. மூலம்: காவ் கனெக்ஷன் இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
313
47