AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
11 Aug 19, 06:30 PM
கால்நடை வளர்ப்புhpagrisnet.gov.in
கால்நடைகளில் இழைய அழுகல் (கருங்கால்) நோயைத் தடுத்தல்
இழைய அழுகல் அல்லது கருங்கால் நோயானது பசு மற்றும் எருமை இரண்டிலும் பாக்டீரியா வழியாக பரவுகிறது. இந்த நோயில், பின்னங்காலின் மேல் பகுதியில் கடுமையான வீக்கம் தோன்றும். இதன் காரணமாக கால்நடைகள் நொண்டி நொண்டி நடக்கத் தொடங்குகிடும். கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல் ஏற்படும் மற்றும் வீங்கிய பகுதியை அழுத்தும்போது பலமாகக் கத்தும். சிகிச்சையும் தடுப்பும்: அருகிலுள்ள கால்நடை மருத்துவரை உடனடியாக தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்திடுங்கள். கால்நடைகளுக்கு முறையான சிகிச்சையளிக்காமல் தாமதம் செய்தால் பாக்டீரியாக்கள் உடல் முழுவதும் பரவி, அதன்மூலம் ஏற்படும் நச்சுத்தன்மையால் மரணம் ஏற்படக்கூடும். இதற்கான சிகிச்சைக்கு பென்சிலின் தடுப்பூசிகளின் உயர் மருந்தளவு கால்நடைகளுக்குப் போடப்படுகிறது மற்றும் வீங்கிய பகுதிகளிலும் பெனிசிலின் போடப்படுகிறது. இந்த நோயைத் தடுக்கும் பொருட்டு, கால்நடை கிளினிக்குகளில் இந்தத் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது; கால்நடை வைத்திருப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆதாரம்: hpagrisnet.gov.in
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
179
0