Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
25 May 19, 06:00 PM
கரிம வேளாண்மைஆக்ரோஒன்
நல்ல விளைச்சலைப் பெற ஜீவாமிர்தம் தயாரித்தல்
ஜீவாமிர்தம் என்பது நொதிக்க வைக்கப்பட்ட நுண்ணுயிரிக் கலவையாகும். இது ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, முக்கியமாக செடிகளில் ஏற்படும் பூஞ்சை மற்றும் பாக்டீரிய நோய்களைத் தடுப்பதில் உதவுகிறது. ஜீவாமிர்தத்தை எப்படித் தயார் செய்வது: 1. ஒரு பீப்பாயில் 200 தண்ணீரை ஊற்றவும்; அதில் 10 கிலோ நாட்டுப் பசுஞ்சாணத்தையும், 5 முதல் 10 லிட்டர் நாட்டுப் பசுங்கோமியத்தையும் சேர்க்கவும்; மேலும் 2 கிலோ வெல்லம் (நாட்டு வெல்லம்), 2 கிலோ தானிய மாவு மற்றும் வயலில் இருந்து எடுக்கப்பட்ட மண் ஒரு கையளவு அதில் சேர்க்கவும். 2. கலவையை நன்கு கலக்கி, சூரியஒளி படாத நிழலான இடத்தில் அதனை 48 மணிநேரம் வைக்கவும். அதன்பிறகு ஜீவாமிர்தம் பயன்படுத்தத் தயார்நிலையில் இருக்கும். ஒரு ஏக்கர் நிலத்திற்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம் போதுமானது. ஜீவாமிர்தத்தி
ன் நன்மைகள்: 1. ஜீவாமிர்தம் செடியின் வளர்ச்சியை ஊக்குவித்து நல்ல மகசூலைத் தந்திடும். 2. பூச்சிகள் மற்றும் நோய்கள் ஏற்படுவதைத் தடுத்திடும். 3. நன்மைதரும் உயிரிச் செயல்பாடுகளை அதிகரித்து, மண்ணில் இயற்கையான கார்பனை அதிகரித்திடும். 4. ஜீவாமிர்த பயன்பாடு: நீர்ப்பாசனத்தின் போது கலந்து பயன்படுத்தலாம் அல்லது இதன் 10% அளவை நீருடன் கலந்து மாதம் இரண்டு முறை தெளிக்கலாம். ஆதாரம்: http://www.fao.org இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
686
0