Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
15 Jun 19, 06:00 PM
கரிம வேளாண்மைதிரு சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் பண்ணைகள்
பிஜமிர்தாவின் தயாரிப்பு:
பிஜமிர்தா / பீஜாம்ருத்தா என்பது தாவரங்கள், நாற்றுகள் அல்லது எந்த நடவு பொருட்களுக்கும் செய்யப்படும் ஒரு சிகிச்சையாகும். மழைக்காலத்திற்குப் பிறகு, மண் மூலம் பரவும் பூஞ்சையுடன் இணைந்து மற்றும் விதை மூலம் பரவும் நோய்களிலிருந்து இளம் வேர்களை பாதுகாப்பதில் இது திறன் மிகுந்து காணப்படுகிறது. இது ஜீவாம்ருதாவை தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருள்களையே போன்று அதே மாதிரியானப் பொருட்களையேக் கொண்டிருக்கிறது. 20 லிட்டர் தண்ணீரை, 5 கிலோ உள்ளூர் மாடு சாணம், 5 லிட்டர் லோக்கல் மாட்டு சிறுநீர், 50 கிராம் சுண்ணாம்பு மற்றும் பண்ணையின் வரப்பிலிருந்து கையளவு மண்ணையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
தயாரிப்பு முறை: • ஒரு துணியில் 5 கிலோ உள்ளூர் மாட்டு சாணம் எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் அதை ஒரு டேப் கொண்டு கட்டி விடவும். 20 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் வரை தொங்கவிடவும். • ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்து அதில் 50 கிராம் சுண்ணாம்பு சேர்த்து, இரவில் அது அப்படியே நிலையாக இருக்குமாறு வைக்கவும். • பின்னர் அடுத்த காலையில், இந்த மாட்டு சாணத்தின் உருண்டையை நீரில் மூன்று முறை தொடர்ந்து நன்கு கசக்கி கலக்கவேண்டும். அதனால் நீரிலுள்ள அந்த சாணத்தின் சாறுகள் அனைத்தும் முழுமையாக கரைந்து விடும். • மேலும் அதில் ஒரு கையளவு மண்ணை எடுத்துப்போட்டு நன்கு கலக்கவும். • இறுதியாக 5 லிட்டர் நாட்டு மாட்டு சிறுநீரை அல்லது மனித சிறுநீரை அந்த கரைசலில் சேர்க்கவும். சுண்ணாம்பு நீரை சேர்த்து நன்றாக கலக்கவும். பிஜமிர்தாவின் பயன்பாடு: விதைச் சிகிச்சையாக எந்த பயிரின் விதையிலும் பிஜமிர்தாவை சேர்த்துப்பயன்படுத்தலாம். நன்றாக படும்படி சேர்க்கவும் மற்றும் கையினால் நன்கு கலக்கவும்; நன்றாக உலர்த்தவும் பின்பு விதைப்பதற்கு பயன்படுத்தவும். பருப்பு வகை விதைகளுக்கு அவற்றை விரைவாக நனைத்துவிட்டு மற்றும் உடனே உலர்த்தவேண்டும். மூலம்: திரு சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் பண்ணைகள் இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
817
0