AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
17 Apr 19, 10:00 AM
சர்வதேச வேளாண்மைஊனிவிஸின் மீடியா
பசுமைக்குடில் பயிர்செய்கை
வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் தானியங்கு அமைப்பின் உதவியுடன் கூடிய உரம் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட சூழலின் கீழ் பயிர்களை வளர்ப்பது பசுமைக்குடில் பயிர்செய்கை எனப்படுகிறது. குறிப்பாக இயற்கை விவசாயத்தை விரும்பிடும் விவசாயிகளுக்கு பசுமைக்குடில் நல்ல பலனளித்திடும். இதன் நன்மைகள் பின்வருமாறு:
•கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையின் கீழ் செடிகள் வளர்க்கப்படுவதால், பயிரிழப்பு அல்லது சேதத்துக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு • குறிப்பிட்ட பருவகாலத்துக்காக காத்திருக்காமல், வருடம் முழுவதும் பயிர்களை வளர்க்கலாம். • பசுமைக்குடிலில் குறைந்தபட்ச பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலே ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. • வெளிப்புறக் காலநிலையால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படாது • பசுமைக்குடிலில் உயர்தரமான உற்பத்தியைப் பெறலாம் • நல்ல வடிகால் மற்றும் காற்றோட்ட அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். • பசுமைக்குடில் எந்தக் காலநிலையிலும் சரியான சுற்றுச்சூழல் வசதிகளை செடிகளுக்கு வழங்கிடும் •மகசூலை சுமார் 5 முதல் 10 மடங்கு வரை அதிகரித்திடும் • பயிரிடுதல் காலஅளவு குறைவாக இருக்கும் • உரப் பயன்பாடு எளிதாகிடும் மற்றும் சொட்டுநீர்ப் பாசனத்தின் உதவியுடன் தானாகவே கட்டுப்படுத்தப்படுகிறது ஆதாரம் -ஊனிவிஸின் மீடியா இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
681
9