AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
18 Jul 19, 10:00 AM
குரு க்யான்ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
முருங்கையில் பூச்சி மேலாண்மை
முருங்கைப் பயிரிடல் விவசாயிகளுக்கு சிறந்த பொருளாதார நலனை அளிக்கக்கூடியது. இருந்தாலும், சில பூச்சித்தாக்குதல்கள் அதில் ஏற்பட வாய்ப்புள்ளது. வலையை உருவாக்கும் லார்வாக்கள் மற்றும் இலைத் துளைப்பான், மொட்டுத் துளைப்பான், உறிஞ்சுப் பூச்சிகள் (வெள்ளை ஈ, செதிற்பூச்சி, இலைப்பேன் மற்றும் அசுவினி) மற்றும் மரப்பட்டையை உண்ணும் வெட்டுக்கிளி, தண்டு துளைப்பான் மற்றும் நெற்று ஈ ஆகியவை பயிரைச் சேதப்படுத்தலாம். இவற்றில், இலைத் துளைப்பானின் லார்வாக்கள்தான் முருங்கையை அதிகம் பாதிக்கக்கூடியது. ஒருங்கிணைந்த மேலாண்மை (IPM) • வயலில் ஒளிப்பொறிகளை அமைக்கவும். • பூச்சித் தாக்குதலின் தொடக்கத்திலேயே, நீம் சீட் கெர்னல் சஸ்பென்ஷன் 5% (500 கி) அல்லது வேம்பு அடிப்படையிலான கலவைகள் @ 10 மிலி (1% EC) முதல் 40 மிலி (0.15% EC) ஆகியவற்றைத் தெளிப்பதன் மூலம் உறிஞ்சுப் பூச்சி மற்றும் வெட்டுக்கிளியின் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், வெர்டிசிலியம் லகானி அல்லது போவேரியா பாஸியானா போன்ற பூஞ்சை அடிப்படையிலான உயிரிபூச்சிக்கொல்லிகளையும் 10 லிட்டர் தண்ணீருக்கு 40 கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம். • கீழே விழுந்த காய்களை வழக்கமான முறையில் சேகரித்து, மண்ணினுள் புதைக்கவும். • கீழே விழுகின்ற பழங்களை அவ்வப்போது சேகரித்து, ஒரு குழியில் இட்டு நன்கு மூடி அழிக்கவும். • நெற்றுப் பூச்சிகளின் தாக்குதலைக் குறைப்பதற்கு, காய் உருவாக்கும் காலகட்டத்தின் போது வேம்பு அடிப்படையிலான கலவைகளைத் தெளிக்கவும் மற்றும் மீண்டும் 35 நாட்கள் கழித்து அதேபோன்று தெளிக்கவும்.
டாக்டர். டி. எம். பார்படா, முன்னாள். பூச்சியியல் பேராசிரியர், பி. ஏ. வேளாண்மை கல்லூரி, ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம், ஆனந்த்- 388 110 (குஜராத் இந்தியா) இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
253
13