Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
23 Mar 19, 06:00 PM
கரிம வேளாண்மைஅனைவருக்குமான வேளாண்மை
பகுதி -2 புளிக்கச் செய்த மீன் கழிவு (குணபசேலம்)
புளிக்கச் செய்த மீன் கழிவு தயாரித்தல்: • 1 கிலோ மீன், • 1 கிலோ வெல்லம் • 1 கிலோ மீன் கழிவிற்கு, 1 1/2 கிலோ வெல்லம் சேர்க்கவும். • பாத்திரத்தின் வாயை, பூச்சிகள் நுழையாதிருக்க, ஒரு சணல் அல்லது பருத்தி துணிகொண்டு மூடி, பாத்திரத்தை வீட்டுற்கு வெளியே, விலங்குகளிடமிருந்து தள்ளி வைக்கவும், ஏனெனில், முதல் நான்கு நாட்களில் இந்த தயாரிப்பின் மோசமான வாசனை அவைகளை ஈர்க்கக் கூடியதாக இருக்கக்கூடும். • 5-ஆம் நாள் மற்றும் அடுத்த 20 - 30 நாட்களின் போது தினமும் ஒரு முறை கலவையை நீங்கள் கலக்கிவிட வேண்டும். • இந்த நேரத்தில் மோசமான வாசனையிலிருந்து, இனிய வாசனையாக மாறுவதை நீங்கள் கவனிப்பீர்கள். • இந்தக் கரைசலானது 10-வது நாளில் புளித்துவிடும், ஆனால் நீங்கள் இன்னும் 15-20 நாட்கள் கூட வைக்கலாம். வாசனையைக் கொண்டு நீங்கள் தீர்மானிக்கலாம்: வாசனை மறைந்து போகும் போது கரைசலானது பயன்படுத்த தயாராக உள்ளது! • ஒரு வடிகட்டி கொண்டு கரைசலை வடிகட்டவும், வடிகட்டின திரவமானது பார்க்க தேன் போன்ற திரவமாகத் தோன்றும். • வடிகட்டின திரவத்தை ஒரு கண்ணாடி ஜாடி அல்லது வேறு மூடிய கொள்கலனில் வைத்து, அதை இறுக்கமாக மூடவும். • இந்த சாறானது ஆறு மாதங்களுக்கு நல்ல நிலைமையில் இருக்கும். • நீங்கள் புதிதாக பிடித்த மீன்களை 1” துண்டுகளாகப் பயன்படுத்தினால், நீங்கள் அதனை இரண்டு அல்லது மூன்றாம் முறை கரைசலை தயாரிக்கப் பயன்படுத்தலாம், ஆனால் மீன் கழிவை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படலாம். ஒவ்வொரு முறையும் நீங்கள் மீனுடன் சமமான அளவு வெல்லத்தை சேர்த்து, அது புளிக்கச் செய்ய அதை 15 - 20 நாட்கள் வைத்திருக்க வேண்டும்.
நன்மைகள்: குணபசேலமானது செடிகளுக்கு மிகவும் நல்ல ஒரு டானிக் ஆகும். அது நைட்ரஜனை (தாவரத்தின் 8% - 10% தேவை) வழங்கி, தாவர வளர்ச்சியில் உதவுகிறது. இது மண்ணின் வளத்தையும் அதிகரிக்க உதவக் கூடிய அமினோ அமிலங்கள், நுண்ணுயிரிகள், மைக்ரோ மற்றும் மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் ஆகியவற்றின் ஒரு வளமான ஆதாரமாகும். இது ஒரு இயற்கை வளர்ச்சி ஊக்குவிப்பாணாக மற்றும் பூச்சி எதிர்ப்பாக என இரண்டுமாக பயதருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேற்கோள்: ஆக்ரோஸ்டார் ஆக்ரானாமி சென்டர் ஆஃப் எக்சலன்ஸ்
259
2