Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
24 Jun 19, 10:00 AM
ஆலோசனைக் கட்டுரைஅப்னி கேதி
(பகுதி -2) அமுக்கிரா கிழங்கின் சாகுபடி நடைமுறைகள்: மருத்துவ தாவரம்
நாற்றுப்பண்ணை மேலாண்மை மற்றும் நடுதல்; மண் நல்ல விளைச்சலை கொண்டுவர விதைப்பதற்கு முன் இருமுறை முட்கலப்பையுழவு செய்யவேண்டும், மற்றும் அதன் ஊட்டச்சத்துக்காக ஏராளமான கரிமப் பொருட்களால் அதை நிரப்பவும். சிகிச்சையளிக்கப்பட்ட விதைகளை தரை மட்டத்திலிருந்து உயர்த்தப்பட்ட நாற்றுப்பண்ணை வரப்பில் விதைக்க வேண்டும். நடவு செய்வதற்கு முன், 10-20 டன் பண்ணை உரம், 15 கிலோ யூரியா, மற்றும் 15 கிலோ பாஸ்பரஸ் ஆகியவற்றை மண்ணுக்கு ஊட்டச்சத்து அளவாக தெளிக்கவும். விதைகள் 5-7 நாட்களில் முளைத்து சுமார் 35 நாட்களில் நடவு செய்ய தயாராக இருக்கும். நடவு செய்வதற்கு முன், போதுமான அளவு தண்ணீரைப் பயன்படுத்துங்கள், இதனால் நாற்றுகள் எளிதில் பிடுங்கப்படும். பண்ணையில் 40 செ.மீ அகலமான பள்ளத்துடன் நாற்றுகளை நடவேண்டும். உர மேலாண்மை: நிலம் தயாரிக்கும் போது ஏக்கருக்கு சுமார் 4-8 டன் பண்ணை எருவை மண்ணுடன் கலக்க வேண்டும். பின்னர் நிலம் பலகைப்பாவல் மூலம் சமன் செய்யப்பட வேண்டும், மற்றும் பண்ணையை சமன் செய்ய பாட்டா பயன்பாடு மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு மருத்துவ தாவரமாகவும் மற்றும் கரிம வேளாண்மை மூலம் வளரும் என்பதால், இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் ஒரு பயன்பாடும் இல்லை. தொழு உரம் (FYM), மண்புழு உரம், பச்சை உரம் போன்ற சில கரிம உரங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகின்றன. மண் அல்லது விதை மூலம் பரவும் நோய்களைத் தவிர்க்க, வேம்பு, சித்ராக்மூல், தாதுரா, மாட்டு சிறுநீர் போன்றவற்றிலிருந்து சில உயிர் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. வளமான மண்ணிலிருந்து அதிக மகசூல் பெற, ஒரு ஏக்கருக்கு 6 கிலோ நைட்ரஜனின் (யூரியா @ 14 கிலோ) பயன்பாடும் மற்றும் 6 கிலோ பாஸ்பரஸ் (எஸ்எஸ்பி @ 38 கிலோ) பயன்படுத்தவேண்டும். குறைந்த வளமான மண்ணில் அதிக வேர் விளைச்சலை உருவாக்க ஒரு ஹெக்டருக்கு 40 கிலோ நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் பயன்பாடு போதுமானது. களைக் கட்டுப்பாடு: பண்ணையில் களை இல்லாமல் இருக்க இரண்டு களை எடுத்தல்கள் வழக்கமாக செய்யப்படுகின்றன. ஒன்று விதைத்த சுமார் 20-25 நாட்களில் செய்யப்படுகிறது மற்றும் முதல் களைஎடுப்பு செய்த 20-25 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது களை எடுத்தல் செய்யப்படுகிறது. களைகளை கட்டுப்படுத்த, விதைகளை விதைப்பதற்கு முன், ஒரு ஏக்கருக்கு ஐசோபிரோடூரான் 200 கிராம் மற்றும் கிளைபோசேட் 600 கிராம் பயன்படுத்துங்கள். நீர் பாசனம்: அதிகப்படியான நீர் அல்லது மழை பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதிகப் படியான மழைப்பொழிவு சமயத்தில், நீர் பாசனம் செய்ய வேண்டிய அவசியமில்லை அப்படியே செய்தாலும் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே நீர்ப்பாசனம் செய்தால் போதுமானதாக இருக்கும். பயிர் பாசன சூழ்நிலையில் 10-15 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யலாம். விதை முளைத்தலுக்கு 30-35 நாட்களுக்குப் பிறகு முதல் நீர்ப்பாசனம் செய்யப்பட வேண்டும் பின்னர் 60-70 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது நீர்ப்பாசனம் செய்யவேண்டும். அறுவடை செய்தல்: பயிர்கள் 160-180 நாட்களில் முதிர்ச்சியடையும். இலைகள் உலர்ந்ததும், பெர்ரி சிவப்பு-ஆரஞ்சு நிறமாக மாறும் போது வறண்ட காலநிலையில் அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. பவர் டில்லர் அல்லது நாட்டு கலப்பை போன்ற இயந்திரங்கள் மூலம் வேர்களை சேதப்படுத்தாமலும் அல்லது தாவரத்தை கைகளால் அகற்றுவதன் மூலமும் அறுவடை செய்யப்படுகிறது. மூலம்: அப்னி கேத்தி
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
332
0