Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
25 Apr 19, 10:00 AM
குரு க்யான்ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
(பகுதி 1) தக்காளியிலுள்ள மூன்று-வண்ண பிரச்சனை
மூன்று வண்ணங்களிலுள்ள தக்காளி நடவடிக்கைகளை இரண்டு கட்டங்களில் திட்டமிடப்பட வேண்டும். முதல் கட்டத்தில், நாம் பிந்தைய சிக்கல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மற்றும் இரண்டாவது கட்டத்தில், இந்த பிரச்சினைகள் காணப்பட்டால், பிரச்சனையின் தீவிரத்தைக் குறைக்க வேண்டி சில உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நோய்களின் அறிகுறிகள்: பழத்தின் பெரும்பகுதி மஞ்சள் நிறமாகவும் முழுமையாக முதிர்ச்சியடையாமல் இருக்கும். தவறான கருத்து: மூவண்ண பழத்தின் சிக்கலாவது பல்வேறு வகை மற்றும் வைரஸ் நோய்கள் இதற்கு பொறுப்பாகும் காரணங்கள்: இந்த சிக்கலின் சரியான காரணத்தை அடையாளம் காண சற்று கடினமாக
இருந்தாலும், கீழே குறிப்பிட்டுள்ள சில காரணங்கள் காரணமாக அது ஏற்படுகிறது._x000D_ 1. தக்காளி சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் நிலம் குறைந்த தரம் / குறைந்த வளங்களுள்ளதாக தேர்வு செய்தல்_x000D_ 2. சமநிலையற்ற ஊட்டச்சத்து பயன்பாடு_x000D_ 3. உறிஞ்சும் பூச்சி தொல்லை_x000D_ 4. வைரஸ் நோய் தொற்றுகள்_x000D_ 5. ஒழுங்கற்ற · மற்றும் கூடுதல் அல்லது குறைவாக நீர் மேலாண்மை_x000D_ 6. தீவிர வெப்பநிலையில் ஒழுங்கற்ற பாதுகாப்பு_x000D_ _x000D_ முதல் கட்டத்திலிள்ள பிரச்சினைகள் தவிர்க்க எடுக்கவேன்டிய தடுப்பு நடவடிக்கைகள்_x000D_ 1. நிலம் தேர்வு - தக்காளி பயிர்களைப் பயிரிட நிலம் வளமாக இருக்க வேண்டும், ஊட்டச்சத்து நிறைந்து மற்றும் தண்ணீர் வடிகட்டிய படி இருக்கவேண்டும். இத்துடன் இந்த சாகுபடி முறையும் முக்கியமாகும். வேர்கள் அருகே மண் காற்றோட்டமாக இருக்க எப்போதும் பரந்த உயர்ந்த வரப்புகள் இருக்குமாறு செய்யவேண்டும். சாகுபடிக்கு, சொட்டு நீர் பாசனத்தைப் பயன்படுத்தவும். வரப்பு 0.5 அடி உயரம் மற்றும் 3 அடி அகலம் இருந்தால், வெள்ளை வேர்கள் செயல்படுத்தப்படுகிறது மற்றும் ஊட்டச்சத்து வழங்கல் நன்றாக நிர்வகிக்கப்படுகிறது._x000D_ _x000D_ 2. சீரான ஊட்டச்சத்துக்களின் பயன்பாடு - முடிந்தால், மண்ணில் காணப்படும் ஊட்டச்சத்துக்களை அறிந்து கொள்வதற்கு தக்காளி வளரும் முன் மண் பரிசோதனை செய்யுங்கள். அதோடு, வரப்புகள் செய்யும் நேரத்தில், உரங்களை ஒரு அடி உரமாக இடவேண்டும். (கரிம எரு, வேப்பம் பிண்ணாக்கு, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், கந்தகம் ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும். தக்காளி சாகுபடி செய்யப்பட்ட பிறகு வழக்கமான சொட்டு நீர்ப்பாசனம் மூலம் கரையக்கூடிய உரங்களைத் தொடர்ந்து அளிக்கவும்._x000D_ _x000D_ 3. பருவகாலத்திற்கு ஏற்றாற் போல் அதற்கான சரியான வகைகளைத் தேர்வுசெய்தல் - · நல்ல தக்காளி உற்பத்திக்காக கலப்பின வகைகளைத் தேர்ந்தெடுக்கும் போது பின்வரும் நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்ளவும். எப்போது பகல் குறுகியதாகவும் மற்றும் இரவு நீண்டதாக இருக்கின்ற கோடைக்கால வகைகளில் மகசூல் நன்றாக இருக்காது. அதனால் செமினிஸ், அன்சால், ஆயுஷ்மான், சிங்கெந்தா-6242, 1057, பேயர் - 1143, பயோசீட் வீர், ஜே கே-811 போன்றவைகளைக் கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் முன் பருவப் பயிர் மற்றும் தாமத முன் பருவப் பயிருக்கு, சிங்கெந்தா-2048 செமினிஸ்- கார்வா. நாம்தாரி 629 போன்ற வகைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும்._x000D_ குறிப்பு- தேஜஸ் கொல்ஹெ, மூத்த உழவியல் வல்லுநர்_x000D_ இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
298
16