Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
08 Jul 19, 10:00 AM
ஆலோசனைக் கட்டுரைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
பப்பாளி - பெரும் நோய்களும் தடுப்பு நுட்பங்களும்
உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் பப்பாளி முக்கியமாக வளர்க்கப்படும் ஒரு பழவகையாகும். வாழைப் பயிரை அடுத்து, இதுதான் ஒரு செடிக்கு அதிக விளைச்சலைத் தரக்கூடியது மற்றும் இது முழுவதும் மருத்துவப் பலன்களைக் கொண்டது. வளையப் புள்ளி நோய்: பப்பாளிச் செடியின் எந்தவொரு நிலையிலும் வளையப் புள்ளி நோய் ஏற்படும். இதன் அறிகுறிகள் உயரே இருக்கும் மென்மையான இலைகளில் இருந்து தொடங்குகிடும். பாதிக்கப்பட்ட இலைகள் வெளிறியும், சிறுத்தும் போய்விடும். இலையின் மேற்பரப்பு கடினமாகி, அதன் மீது அடர் பச்சை நிறப் புள்ளிகள் தோன்றும். இலைகள் படர்ந்த மரமானது குன்றிப்போய், மேற்பகுதியில் இலைகள் மட்டுமே கொண்டு காட்சியளிக்கும். புதிய இலைகளின் மீது, மஞ்சள் நிறத் திட்டுக்களும், அடர் பச்சை நிறப்பகுதிகளும் தோன்றும். இந்த நோயின்
காரணங்கள்: பப்பாளி வளையப் புள்ளி என்ற ஒரு வைரஸ் இந்த நோயை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் ஒரு பப்பாளிச் செடியில் இருந்து மற்றொரு செடிக்குப் பரவிடும். இது பொதுவாக மாஹு (அஃபிஸ் கோஸிபி) எனப்படும் நோயைப் பரப்பும் பூச்சிகளின் மூலம் பூச்சிகளின் மூலம் பரப்பப்படுகிறது. திட்டுக்கள் இந்த நோயின் வழக்கமான அறிகுறி, இலைகளின் மீது பச்சை நிறத் திட்டுக்கள் தோன்றுவது. சிட்டி நோயில் ஏற்படும் அறிகுறிகளைப் போன்றே இதிலும் இலைகள் உருமாறிக் காணப்படும். மீதமுள்ள அறிகுறிகள் அனைத்தும் சிட்டி நோயில் ஏற்படுவதைப் போன்றே இருக்கும். இந்த நோய் பப்பாளி மொசைக் வைரசால் ஏறப்டுகிரகுடு மற்றும் மாஹு (அஃபிஸ் கோஸிபி) பூச்சிகளின் மூலம் பரவுகிறது. நோய் நிர்வாகம்: வைரஸ் நோயைத் தீர்ப்பது தொடர்பான முறையான தகவல் ஏதும் அறியப்படவில்லை. எனவே, கீழ் குறிப்பிட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், நோயின் தீவிரத்தன்மையைக் குறைக்க முடியும். • தோட்டங்களைச் சுத்தமாக வைத்திருக்கவும். ஏதேனும் ஒரு செடியில் நோய்த்தாக்கம் ஏற்பட்டால், அதன் சருகுகள் ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டு, வைத்து அழிக்கப்பட வேண்டும். • புதிய தோட்டத்தைப் பயிரிடும்போது, நோய்த் தாக்காத செடிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். • நோய்த் தாக்கிய செடிகளுக்குச் சிகிச்சையளித்து ஆரோக்கியமாக்க முடியாது. எனவே, அவற்றை வேருடன் பிடுங்கி எரிக்க வேண்டும். இல்லையென்றால், அது நிரந்தர வைரஸ் ஆதாரமாக ஆகி, மற்ற செடிகளுக்கும் பரவிடும். • நோய்ப் பரப்பும் பூச்சிகளைத் தடுப்பதற்கு, 10-12 நாட்கள் இடைவெளியில் ஒரு லிட்டர் தண்ணீரில் 17.8% SL 0.3 மிலி இமிடாகுளோபிரிடை கரைத்து தெளிக்கவும். குறிப்பு - திரு. எஸ்.கே. தியாகி விஞ்ஞானி, கிரிஷி விக்யான் கேந்திரா, கார்கோன் இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
308
22