Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
31 Mar 19, 06:00 PM
கால்நடை வளர்ப்புஆக்ரோஒன்
எருமை மற்றும் பசுவில் அதிகபட்ச பால் உற்பத்திக்கான ஊட்டச்சத்து மேலாண்மை
● கறவைக்குரிய கால்நடை விலங்குகளின் உடல் வளர்ச்சி, பால் உற்பத்தி, இனப்பெருக்கத்திற்கு போதுமான கால்நடை உணவுயின்மையினால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. எந்தவொரு நிலைமாற்றத்திற்கும் முன்பாக, ஆரோக்கியமான உணவு மேலாண்மை தொடங்கப்பட வேண்டும். ● கால்நடைகளின் உலர் தீவனத்தில் புரதம் மற்றும் ஆற்றலின் அளவு அதிகரிக்கும் போது எதிர்பார்க்கப்படுகின்ற முடிவுக்கு வழிவகுக்கும். ● கால்நடைகளின் எடை மற்றும் நிலைகளைக் கவனமாக கவனிக்கவும். கால்நடைகளின் பிள்ளைப்பேறுக்குப் பிறகு, மூன்று வாரங்களுக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கப்படவேண்டும். எதிர்காலத்தில், ஆற்றல் பற்றாக்குறையைச் சமாளிக்க மற்ற விலங்கு உணவுப்பொருட்களுடன் பைபாஸ் கொழுப்பை சேர்த்து கொடுப்பதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். ● மாடு அல்லது எருமை பால் உற்பத்திச்செய்யும் நிலையை அடைந்தவுடன், பால் உற்பத்தியின் திறனைப் பொறுத்து உணவு வழங்கப்பட வேண்டும். கால்நடைகளின் செரிமானத்திற்கு தேவையான புரதங்கள் மற்றும் நார்சத்தின் அளவுகளும் மற்றும் இதர தாதுப்பொருட்களும் ஒரு கால்நடை மருத்துவரால் பரிந்துரைக்கப்படவேண்டும்.
● மருத்துவர் அல்லது கால்நடை மருத்துவர் ஆலோசனையின் படி, தீவனத்தின் அளவு, புரதங்கள் மற்றும் எருமை மற்றும் பசுக்களுக்கு தேவைப்படும் வழக்கமான உணவுக்கான புரதங்கள் மற்றும் நார்ச்சத்துகள் சேர்த்து இந்த கனிமங்களுடன் வழங்கப்பட வேண்டும்._x000D_ ஆதாரம்: டாக்டர் பாராக் கோன்கலே, ஆக்ரோவொன், பிப்ரவரி 25, 2019_x000D_ _x000D_ இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
504
6