AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
21 Jul 19, 06:30 PM
கால்நடை வளர்ப்புகாவ் கனெக்ஷன்
கால்நடைகளை வாங்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியக் குறிப்புகள்
பெரும்பாலான கால்நடை வளர்ப்பவர்கள், மற்ற இடங்களில் இருந்து அதிக விலைகொடுத்து கறவை விலங்குகளை வாங்குகின்றனர். எனினும், இடைத்தரகர் குறிப்பிட்டதைப் போன்று பால் உற்பத்தி இல்லை என்று பின்னர் கண்டறிகின்றனர். இந்தச் சூழல்களில் கால்நடை வளர்ப்பவர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டிடும். பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள் உடலமைப்பு: ஆரோக்கியமான விலங்கின் உடல் முன்புறம் குறுகியும், பின்புறம் அகன்றும் காணப்படும். அவற்றின் மூக்குப் பகுதி திறந்தவாறும், தாடை வலுவாகவும் இருக்கும். மேலும் ஈர்க்கத்தக்க கண்கள், நீண்ட வால் மற்றும் மென்மையான மெல்லிய தோல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். நெஞ்சின் பகுதிகள் வளர்ச்சியடைந்திருக்கும் மற்றும் பின்புறம் அகன்று காணப்படும். பால் உற்பத்தி: கறவை விலங்கு உற்பத்தி செய்யக்கூடிய பாலின் அளவைப் பொறுத்து அதன் சந்தை விலை தீர்மானிக்கப்படுகிறது. எனவே, கறவை விலங்கை வாங்குவதற்கு முன்னர் 2-3 நாட்களுக்கு அதனிடம் பால் கறந்து சோதித்துப் பார்த்து வாங்கிடுங்கள். வயது: வழக்கமாக 10-12 வயதிற்குப் பிறகு கறவை விலங்கின் பால் கறக்கும் திறன் முடிந்துவிடும். மூன்று அல்லது நான்காவது கன்று ஈனும் போது அதன் கறவைத் திறன் உச்சநிலையில் இருக்கும். விலங்கின் வயதானது அதன் தோற்றம் மற்றும் அதன் பற்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்ப்படுகிறது. ஆதாரம்: கோவன் கனெக்ஷன்
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
615
1