Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
27 May 19, 10:00 AM
ஆலோசனைக் கட்டுரைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
இரசாயன உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும் வழிமுறைகள்
● உரங்களை ஒருபோதும் வெறும் மண்ணில் போடக்கூடாது. மண்ணில் போதுமான ஈரப்பதம் இருக்கும் போதுதான் உரங்களைப் பயன்படுத்த வேண்டும். ● விதைக்கும் போது விதைகளின் கீழ் உரங்களைப் பயன்படுத்த வேண்டும். ● பூச்சு கொண்ட உரங்கள்/கட்டிகள்/சூப்பர் கிரான்யூல்கள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். இவற்றை யூரியா மற்றும் வேப்பங்கட்டிகளுடன் 1:5 என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும். ● பயிரின் முக்கிய வளர்ச்சி நிலைகளின் போது உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
● நீர்ம உரங்களை நுண்ணீர் பாசனம் மூலம் கொடுக்க வேண்டும். ● தானியப் பயிர்களுக்கு, 4:2:2:1(நைட்ரஜன்: பாஸ்பரஸ்: பொட்டாஷ்: சல்பர்) என்ற விகிதத்திலும், பருப்புப் பயிர்களுக்கு 1:2:1:1 என்ற விகிதத்திலும் உரத்தைப் பயன்படுத்த வேண்டும். ● இயற்கை உரங்களை வழக்கமான முறையில் பயன்படுத்தி மண்ணின் pH அளவை 6.5-லிருந்து 7.5-க்குள் பராமரிக்க வேண்டும். ● மண்ணின் பாதுகாப்புக்காக, மண் பாதுகாப்பு நடவடிக்கைகள், இயற்கை வேளாண்மை மற்றும் ஒருங்கிணைந்த இரசாயன மற்றும் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதன் மூலம் மண் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும். இது தற்போது அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பு – அக்ரோஸ்டார் அக்ரோனாமி சென்டர் ஆஃப் எக்செலன்ஸ். இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
467
6