AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
15 Feb 19, 11:00 AM
ஆலோசனைக் கட்டுரைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
போர்டோ கலவை தயாரிப்பதற்கான முறை
தேவையான பொருட்கள் - காப்பர் சல்பேட், கால்சியம் ஹைட்ராக்ஸைட் மற்றும் தண்ணீர். போர்டோ கலவை தயாரிப்பதற்கான முறை - • 1% கலவை தயாரிப்பதற்கு, 1 கிலோ நன்கு அரைத்த காப்பர் சல்பேட், 1 கிலோ கால்சியம் ஹைட்ராக்ஸைட் மற்றம் 100 லிட்டர் தண்ணீர் • முதலில் ஒரு 50 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ நன்கு அரைத்த காப்பர் சல்பேட்டை ஊறவைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் 50 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ கால்சியம் ஹைட்ராக்ஸைட் கரைப்பதற்கு சேர்க்கவும். • குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு கரைசல்களையும் கிளரவும். இரு பொருட்களும் முழுமையாக கரைய விடவும். பின்னர் ஒரே நேரத்தில் மூன்றாவது பாத்திரத்தில் இரண்டு கரைசல்களையும் ஊற்றவும். கரைசல்களை ஊற்றும் போது தொடர்ச்சியாகக் கிளரவும். • இரண்டு கரைசல்களும் முழுமையாக கலந்தப்பின், பாத்திரத்தில், வெளிர் நீல நிற தயாரிக்கப்பட்ட போர்டோ கலவையை காணலாம்.
பயன்பாடிற்கு முன் சோதனை - • சோதனைக்கு, 0.5 முதல் 1 நிமிடம் வரை கரைசலில் இரும்பு ஆணியை மூழ்கச் செய்யவும். அதன் பிறகு மூழ்கச் செய்த பாகத்தில் ஒரு சிவப்பு படலம் தோன்றவில்லை என்றால், அந்த கரைசலானது ஸ்ப்ரே செய்ய பொருத்தமானது ஆகும். எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் - • எப்போதும் கரைசலைத் தயாரிப்பதற்கு ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தவும். • கரைசலானது உடனடியாக, தயாரித்த 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டும். கரைசலைத் தயாரிக்கும் போது, இரண்டு பொருட்களும் அதில் முழுமையாக கரைக்கப்படுவதை உறுதிச் செய்யவும். கலக்கும் சமயம் இரண்டு கரைசல்களும் குளிர் பதத்தில் இருக்க வேண்டும். இந்த வழியில், போர்டோ கலவையானது பூஞ்சை நோய்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படலாம்
5
3