AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
15 Jul 19, 10:00 AM
ஆலோசனைக் கட்டுரைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
கரும்பில் ஏற்படும் கம்பளி அசுவுனியின் மேலாண்மை
கரும்பு என்பது இந்தியாவின் சில பகுதிகளில் வளர்க்கப்படும் ஒரு முக்கியமான வணிக பயிர். முதன்மையாக மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் கம்பளி அசுவினி எனப்படும் பூச்சியால் பயிரின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது வளர்ந்த இலைகளில் கூட்டமாகவும், சில நேரங்களில் கரும்பு கரணைகளிலும் காணப்படுகிறது. இது கூட்டமாக இருப்பது வெள்ளை தூள் நிறை போல இருக்கும் எனவே, கம்பளி அசுவினி என்ற பெயர் வழங்கப்படுகிறது. பூச்சியின் ஆண் முட்டைப் புழுவின் கூடு வெளிர்-பச்சை வெள்ளை நிறத்திலும் மற்றும் பெண் இளம்பூச்சி வெளிர் மஞ்சள் வெள்ளை நிறத்தில் இருக்கும். வளர்ந்த பெண் அப்டெரஸ் (சிறகிலா). இது பக்கவாட்டில் தாழ்ந்தும் மென்மையான மற்றும் பரந்த உடலைக் கொண்டுள்ளது. உடல் வெள்ளை, பருத்தி போன்ற சுரப்புகளால் மூடப்பட்டிருக்கும். ஆண் கம்பளி அசிவினிக்கு இறக்கைகள் உள்ளன. கம்பளி அசுவினி தொற்றுநோய்களின் நிலைகள் மற்றும் அறிகுறிகள் இளம்பூச்சி மற்றும் வளர்ந்தவைகள் இரண்டும் சர்க்கரை இலைகளின் கீழ் பகுதியின் மேற்பரப்பில் இருந்து தாவர இனப்பாலை உறிஞ்சுகின்றன. அவை பெரிய அளவில் ,தேன்துளிகளை வெளியேற்றுகின்றன, அது இலைகளின் மேல் மேற்பரப்பில் விழும் மற்றும் அவைகளுக்கு ஒரு ஒட்டும் பூச்சு கொடுக்கிறது. இதன் காரணமாக, இலைகளில் கரும்பூசண நோய் உருவாகிறது. கரும்பூசணை தடிமனாகவும், ஒளிச்சேர்க்கைக்கு இடையூறாகவும் இருக்கிறது, இதன் விளைவாக கணிசமாக குறைந்த கரும்பு மகசூல் (25%) மற்றும் சுக்ரோஸ் உள்ளடக்கம் (26.71%) ஏற்படுகிறது. ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் தாவரங்கள் இறக்கக்கூடும். இந்த பூச்சியின் பரவலானது காற்று, எறும்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட இலைகள் வழியாக ஏற்படுகிறது. சாதகமான காலநிலை மேகமூட்டமான வானிலை, 70 முதல் 95% ஈரப்பதத்துடன், கம்பளி அசுவினியின் வளர்ச்சிக்கு சாதகமானது. ஜூன் மாதத்தில், கடுமையான தொற்றுநோய்கள் காணப்படலாம் மற்றும் பூச்சி தொற்றுநோய்கள் செப்டம்பர் வரை மிக அதிகமாக இருக்கும். கம்பளி அசுவினியின் நடைமுறைகளின் மேலாண்மை: • பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கரும்பு விதைகளை புதிய கரும்பு சாகுபடிக்கு பயன்படுத்தக்கூடாது. • கம்பளி அசிவினியை கட்டுப்படுத்துவதற்கு வரப்பும் வாய்க்காலும் முறையில், நீள்வரிப் பள்ள முறையில், ஒற்றை மொட்டு விதைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துதல் மூலம் கரும்பு நடவு செய்யலாம். • தொற்று அதிகமாக இருந்தால் கரும்பு பாதிக்கப்பட்ட பாகங்கள் எரிக்கப்பட வேண்டும். • கரும்பு பயிருக்கு அதிகப்படியான நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும் மேலும் இது தேவை அடிப்படையில் செய்யப்பட வேண்டும். • • சீரான ரசாயன உரங்களை பரிந்துரைகளின்படி பயன்படுத்த வேண்டும். வயலில் தேவையான நைட்ரஜன் உரங்களை விட அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும். நிலத்திற்கு ஹெக்டேர் ஒன்றுக்கு தொழு உரம் மற்றும் மண்புழு உரத்தை 20 டன் பயன்படுத்தவேண்டும். • கரும்புகளில் கம்பளி அசுவினியின் வளர்ச்சியை திறம்பட கட்டுபடுத்துவதற்கு, தம்பலப் பூச்சி, பச்சைக் கண்ணாடியிறக்கைப் பூச்சி, போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு முகவர்களைப் பாதுகாக்கவும் மற்றும் ஏக்கர் ஒன்றுக்கு டயபா அஃபிடோவோரா @ 50000 / போன்ற உயிரியல் கடடுப்பாட்டுப் பொருள் பயன்படுத்தவும். • கொன்றுண்ணிகள் இருக்கும் இப்பகுதியில் ரசாயன பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதைத் தவிர்க்கவும். • பயிரின் ஆரம்ப கட்டங்களில், லிட்டர் ஒன்றுக்கு குளோர்பைரிபாஸ் 50% + சைபர்மெத்ரின் 5% EC @ 2 மில்லி தெளித்தல் பரிந்துரைக்கப்படுகிறது. வயலில் சொட்டு நீர் பாசனம் இருந்தால், ஒரு ஏக்கருக்கு குளோர்பைரிபோஸ் 50% + சைபர்மெத்ரின் 5% EC @ 500 கிராம் பின்னர் தெளிக்கவும். (இது அதிக தொற்று ஏற்பட்டால்). • ஆறு மாத வயது கரும்பு பயிரில், ஒரு ஏக்கருக்கு திமேட் 10% @ 3-5 கிலோவை மண் பயன்பாடு மூலம் பயன்படுத்தப்பட வேண்டும். • கரும்பை கட்டைப்பயிர் செய்தலை தவிர்க்கவும் மற்றும் பாதிக்கப்பட்ட பயிரின் குப்பைகளை எரிக்க வேண்டாம். பயிர் அறுவடை செய்த பிறகு, தண்டுகளில் தளிர்கள் வளர்ச்சியை அனுமதிக்க வேண்டாம். குறிப்பு - ஆக்ரோஸ்டார் வேளாண் மையம் சிறப்பு
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
147
3