Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
01 Aug 19, 10:00 AM
குரு க்யான்ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
நெல்லில் இலைத்தத்திப் பூச்சிகளின் மேலாண்மை
இலைத்தத்திப் பூச்சி, புகையான், வெண்முதுகுத் தத்துப்பூச்சி போன்றவைகள் நெல் பயிரை முக்கியமாக பாதிக்கின்றன. இளம்பூச்சி மற்றும் வளர்ந்தவைகள் பயிர்களிலிருந்து தாவர இனப்பாலை உறுஞ்சுகின்றன மற்றும் செடிகள் எரிந்து விட்டன போன்று காணப்படுகிறது (தத்துப்பூச்சியால் கருகல்) ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (ஐபிஎம்): • சீக்கிரமாக நாற்று நடவு செய்வது சேதத்தைக்குறைக்கும். • பரிந்துரைக்கப்பட்ட நைட்ரஜன் உரத்தின் அளவை மூன்று பிரிவுகளாகப் பயன்படுத்துங்கள் • பூச்சிமருந்து தெளித்த பின் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும். • ஒரு ஹெக்டேருக்கு மண்ணில் கார்போபுரான் 3 G @ 25 கிலோ அல்லது ஃபைப்ரோனில் 0.3 GR @ 20-25 கிலோ அல்லது குளோரான்ட்ரானிலிப்ரோல் 0.5% + தியாமெதோக்ஸாம் 1% GR @ 6 கிலோவை கலந்து பயன்படுத்தவும். • சிறுமணி பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவது சாத்தியமில்லை என்றால், 10 லிட்டர் தண்ணீருக்கு அசிடாம்பிரிட் 20 SP @ 4 கிராம் அல்லது க்ளோதியானிடின் 50 WG @ 5 கிராம் அல்லது புப்ரோஃபெசின் 25 SC @ 20 மில்லி அல்லது டினோடோபுரான் 20 SG @ 4 கிராம் அல்லது புப்ரோஃபெசின் 15% + அசெபேட் 35% WP @ 25 கிராம் அல்லது டெல்டாமெத்ரின் 0.72% + புப்ரோஃபெசின் 5.65% EC @ 20 மில்லி அல்லது ஃபெனோபுகார்ப் 20% புப்ரோஃபெசின் 5% EC @ 20 மில்லி அல்லது ஃப்ளூபெண்டியாமைடு 4% + புப்ரோஃபெசின் 20% EC @ 10 மில்லியை கலந்துத் தெளிக்கவும். • பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும் போது முனை தண்டை நோக்கி வைக்கவும். • நெல்லில் ஏற்படும் இலைமடக்குப் புழு மற்றும் தண்டு துளைப்பான்கள் ஆகியவை இந்த தெளிப்பான்களால் கட்டுப்படுத்தப்படும். • பாதிப்புக்குள்ளான பகுதிக்கு மட்டுமே பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துங்கள்
டாக்டர். டி. எம். பார்படா, முன்னாள். பூச்சியியல் பேராசிரியர், பி. ஏ. வேளாண்மை கல்லூரி, ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம், ஆனந்த்- 388 110 (குஜராத் இந்தியா) இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
250
11