Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
25 Jul 19, 10:00 AM
குரு க்யான்ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
சோயா மொச்சை பயிரில் ஏற்படும் இலைஉண்ணும் புழுக்களின் மேலாண்மை
அறிமுகம்: சோயா மொச்சை ஒரு முக்கியமான உணவாகக்கருதப்படுகிறது மற்றும் அது ஒரு பருப்பு வகை தானியங்களாகவும் மற்றும் எண்ணெய் வித்தாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், பருப்பு வகைகளுடன் ஒப்பிடும்போது இது பெரும்பாலும் எண்ணெய் வித்து பயிராக பயன்படுத்தப்படுகிறது. சோயாமொச்சை பருப்பு வகைகள் புரதத்தின் சிறந்த மூலமாகும், இதன் காரணமாக இது சைவ இறைச்சி என்றும் அழைக்கப்படுகிறது. புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் இதன் முக்கிய கூறுகள். சோயாமொச்சையில் 38-40% புரதம், 22%, எண்ணெய், 21% கார்போஹைட்ரேட் மற்றும் 12% ஈரப்பதமும் உள்ளது. சோயாமொச்சை உற்பத்தி செய்யும் மாநிலமாகும் மற்றும் சோயாமொச்சை ஆராய்ச்சி மையம் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் அமைந்துள்ளது. சோயாமொச்சை பயிரில் இருக்கும் இலை உண்ணும் கம்பளிப்புழுக்கள் பயிர் பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. • வயலைச் சுற்றி ஆமணக்கு பயிரை வளர்க்கவும். இலை உண்ணும் கம்பளிப்புழுக்களின் வளர்ந்தவைகள் ஆமணக்கு இலைகளில் தங்களின் முட்டையடைத் திரள்களை இட விரும்புகின்றன. • முட்டையடைத் திரள்கள் போடப்பட்ட ஆமணக்கு இலைகளை சேகரித்து அழிக்கவும். • மாலை நேரத்தில், ஒரு ஹெக்டேருக்கு 500 லிட்டர் தண்ணீரில் SLNPV LE 250 LE கலந்துத் தெளிக்கவும். • பாக்டீரியா அடிப்படையிலான தூள், பேசிலஸ் துரிங்ஜென்சிஸ் @ 15 கிராம் அல்லது பவேரியா பாசியானா, 10 லிட்டர் தண்ணீரில் ஒரு பூஞ்சை அடிப்படையிலான தூள் 40 கிராமை கலந்து தெளிக்கவும். • வேப்பங்கொட்டைக் கரைசல் @ 5% அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு வேம்பு அடிப்படையிலான கரைசல்கள் மிலி 40 மில்லியை (0.15% EC) கலந்துத்தெளிக்கவும். • அதிக தொற்று உள்ள இலைகளில், 10 லிட்டர் தண்ணீரில் குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5 SC @ 3 மில்லி அல்லது பிரொஃபேனோஸ் 50 EC @ 10 மிலி அல்லது குளோர்பைரிபாஸ் 20 EC @ 20 மில்லி அல்லது இந்தோக்சாகார்ப் 15.8 EC @ 10 மில்லியை கலந்துத்தெளிக்கவும்.
டாக்டர். டி. எம். பார்படா, முன்னாள். பூச்சியியல் பேராசிரியர், பி. ஏ. வேளாண்மை கல்லூரி, ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம், ஆனந்த்- 388 110 (குஜராத் இந்தியா) இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
259
19