Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
17 May 19, 11:00 AM
ஆலோசனைக் கட்டுரைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
மாம்பழப் பயிரில் பழ ஈயை நிர்வகித்தல்
• பழங்களை உரிய நேரத்தில் அறுவடை செய்யவேண்டும்; முறையான கவனத்தை மேற்கொண்டு பழங்களை எதுவும் மரத்தில் பழுக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். • பழ ஈ கொண்டு பாதிக்கப்பட்ட பழங்களையும், தோட்டத்தில் தானே விழுகின்ற பழங்களையும் சேகரித்து அழிக்கவும். இதனால் பழ ஈயின் பெருக்கம் குறைக்கப்படும். • பாக்ட்ரோசெரா டோர்சாலிஸ் என்ற பழ ஈயின் கூட்டுப் புழுப் பருவத்தின் போது, 2-லிருந்து 3 செமீ ஆழத்தில் புழுவானது மண்ணைத் துளைத்துச் செல்லும். • பரிந்துரைக்கப்படும் கிரானுலர் பூச்சிக்கொல்லியை மண்ணில் பயன்படுத்தவேண்டும்.
• பூச்சித் தாக்குதல் காலகட்டத்தின் போது, மண்வெட்டி கொண்டு மரத்தின் அருகில் மண்ணைத் தோண்டி, மண் முழுவதும் ஈரப்பதமாகும் வரை 2-லிருந்து 3 செமீ தொலைவிற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மிலி குளோரோபைரிஃபாஸ் 20 EC வீதம் தெளிக்க வேண்டும். • இந்தப் பூச்சியின் லார்வா நிலையில் அது பழத்தினுள் இருக்கும் என்பதால், இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் கொண்டு பூச்சியைக் கொல்லமுடியாது. பழ ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு மீத்தைல் யூஜினால் பொறிகளைப் பயன்படுத்த வேண்டும். ஆதாரம்: அக்ரோவொன் இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
16
2