Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
16 Jun 19, 06:00 PM
கால்நடை வளர்ப்புவிலங்கு அறிவியல் நிலையம், ஆனந்து வேளாண்மை பல்கலைக்கழகம்
வெள்ளப்பெருக்கு நிலைமையின் போது கால்நடை பராமரிப்பு
வெள்ளபெருக்கு சாத்தியம் இருக்கும் போது கால்நடை பாதுகாப்புக்கான நடவடிக்கைகள்: • கால்நடைகளைக்கட்டிப்போடக்கூடாது, அவைளை சுதந்திரமாக விட்டுவிடவேண்டும். • வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிராந்தியத்திலிருந்து உடனடியாக விலங்குகளை உயர்ந்த மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும். • விலங்குகளை அப்பிராந்தியத்திலிருந்து நகர்த்தும் போது உலர் தீவனம் மற்றும் நீரை முழுமையாக மேலாண்மை செய்யுங்கள்.
வெள்ளப்பெருக்கு முடிவடைந்த பின் இந்த முன்னெச்சரிக்கைகளை பின்பற்றவும்: • விலங்குகள் அழுக்கு நீரை குடிப்பதில்லை என்பதை உறுதி செய்யவும். • விலங்குகளுக்கு வெள்ளப்பெருக்கின் போது நிமோனியா, வயிற்றுப்போக்கு மற்றும் தோல் வியாதிகளின் அறிகுறிகள் இருப்பது நிரூபிக்கபட்டால், அண்டை கால்நடை மருத்துவமனையிலிருந்து கால்நடை அதிகாரியைத் தொடர்புக் கொள்ளவும். .• இறந்த கால்நடைகளை உடனடியாக பதிவு செய்ய கிராம பஞ்சாயத்து தொடர்புக்கொள்ளவும். கால்நடையின் உடலின் பிரேத பரிசோதனையை உள்ளூர் கால்நடை அதிகாரி செய்யப்படவேண்டும் அதனால் அரசாங்க உதவி பெறுவதில் சிரமம் ஏற்படாது. • வெள்ளபெருக்கு முடிவடைந்ததை பற்றி உள்ளூர் அதிகாரியின் வழிகாட்டுதலைப் பெற்ற பிறகு, தங்கள் பழைய இடத்திற்கு கால்நடைகளை நகர்த்தவும். • மழை காரணமாக உலர் தீவனம் மிகவும் ஈரமானதாக இல்லாவிட்டால், இந்த தீவிலிருந்து சிலவற்றை உலர்த்திய பிறகு கால்நடைகளுக்கு உண்ணக்கொடுங்கள். மூலம்: விலங்கு அறிவியல் நிலையம், ஆனந்து வேளாண்மை பல்கலைக்கழகம் இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
411
0