Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
18 Apr 19, 10:00 AM
குரு க்யான்ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
தக்காளித் துளைப்பானின் ஒருங்கிணைந்த மேலாண்மை
தக்காளித் துளைப்பான் என்பது தக்காளிப் பயிர்களில் ஏற்படும் ஒரு வகைப் பூச்சி ஆகும் மற்றும் இது தக்காளிப் பழங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திடும். வழக்கமான முறையில் இரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இரசாயனப் பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக, தக்காளித் துளைப்பானைத் தடுப்பதற்கு முறையான ஒருங்கிணைந்த மேலாண்மை நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும்.
ஒருங்கிணைந்த மேலாண்மை: ⮚ பயிர் நிலங்களில் விளக்குப் பொறிகளை அமைக்கவும். ⮚ கவர்ச்சிப் பயிராக நிலங்களில் ஆப்பிரிக்க மாரிகோல்ட் செடிகளை வளர்க்கவும். ⮚ செடிகளில் இருக்கக்கூடிய இளம் புழுக்களை எடுத்து அழிக்கவும். ⮚ ஒரு ஹெக்டேருக்கு 15 வீதம் பழத் துளைப்பான் ஃபெரோமோன் பொறிகளை அமைக்கவும். ⮚ பூச்சிகள் உருவாகத் தொடங்கும் கட்டத்தில், 10 லிட்டர் தண்ணீரில் 40 கிராம் போவேரியா பாசியானாவை கலந்து தெளிக்கவும். ⮚ ஒரு ஹெக்டேருக்கு 250 LE வீதம் HaNPV-ஐத் தெளிக்கவும். ⮚ ஒரு ஹெக்டேருக்கு 750 கிராம் வீதம் பாக்டீரியா அடிப்படையிலான பாசில்லஸ் துரின்ஜீயன்சிஸ் என்ற பொடியைத் தெளிக்கவும். ⮚ பழங்களைப் பறிக்கின்ற ஒவ்வொரு முறையும் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டவற்றைத் தனித்துப் பிரித்து அவற்றை அழிக்கவும். பூச்சி சேதத்தின் தீவிரம் அதிகரிப்பதற்கு முன்பு, 10 லிட்டர் தண்ணீருக்கு 10 மிலி என்ற வீதத்தில் இன்டாக்சாகார்ப் 14.5 SC அல்லது 3 மிலி என்ற வீதத்தில் குளோரான்டிரானிப்ரோல் 18.5 SC அல்லது 10 மிலி என்ற வீதத்தில் சையான்டிரானிப்ரோல் 10.26 OD அல்லது 10 மிலி என்ற வீதத்தில் குளோரான்டிரானிப்ரோல் 8.8% + தையாமீத்தோக்சாம் 17.5% SC-ஐத் தெளிக்கவும். டாக்டர். டி. எம். பார்படா, முன்னாள். பூச்சியியல் பேராசிரியர், பி. ஏ. வேளாண்மை கல்லூரி, ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம், ஆனந்த்- 388 110 (குஜராத் இந்தியா) இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
291
26