Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
04 Feb 19, 10:00 AM
ஆலோசனைக் கட்டுரைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
கத்தரியில் தண்டு மற்றும் பழத் துளைப்பானின் ஒருங்கிணைந்த மேலாண்மை
o பூச்சித்தொற்று ஏற்பட்ட கத்தரிச் செடிகள் மற்றும் பழங்களை அகற்றி, அவற்றை அழித்துவிடவும். o கத்தரிச் செடிகளில் பூ பூப்பதற்கு முன்பு, ஏக்கருக்கு 4 முதல் 6 பெரோமோன் பொறியைப் பயன்படுத்தவும். பயிரின் உயரத்துக்கு மேல் இந்தப் பொறிகளை வைக்க வேண்டும். இதனால் அவற்றின் மூலம் பூச்சிகள் கவர்ந்திழுக்கப்படும். o ஒரு ஏக்கருக்கு ஒன்று வீதம் விளக்குப் பொறியை அமைக்கவும். o பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 2 முதல் 3 வீதம் டிரைக்கோகிரம்மா சிலோனிஸ் உயிரிகளின் டிரைக்கோகிரம்மா கார்டை நிறுவவும்.
o கத்தரிச் செடியின் மீது ஒரு லிட்டர் தண்ணீருக்கு BT உயிரி பூச்சிக்கொல்லியை 10 கிராம் வீதம் தெளிக்கவும். o 15 நாட்களுக்கு ஒருமுறை ஒரு லிட்டர் தண்ணீரில் 3 மிலி வீதம் நீமார்க் 5% அல்லது அசாடிராசினை (300 பிபிஎம்) தெளிக்கவும். ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
879
153