AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
30 May 19, 10:00 AM
குரு க்யான்ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
பழங்களில் ஏற்படும் மாவிலைப் பிணைப்புப் புழு தாக்குதல்
கடந்த 20-25 வருடங்களாக இலைப் பிணைப்புப் புழு இருந்து வந்தாலும், அவை எந்தப் பாதிப்பையும் இதுவரை ஏற்படுத்தியதில்லை. இருந்தாலும், குஜராத் மாநிலத்தில் சவுராஷ்டிரா பகுதியில் மாம்பழம் மற்றும் மாவிலையில் இந்த இலைப் பிணைப்புப் புழு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது பிற பகுதிகளுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. இதன் தாக்குதல் பொதுவாக ஏப்ரல் முதல் நவம்பர் வரை ஏற்படச் சாத்தியமுள்ளது. பாதிப்பு: ஆரம்பத்தில், இலையின் மேலடுக்கைத் துளைப்பதன் மூலம் இலைகளுக்குள் லார்வா செல்கிறது. அதன்பின்னர் இலையினுள்ளே வலைகள் மற்றும் பிணைப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த வருடம் மாம்பழங்களிலும் அதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அது மாம்பழத்தின் சதைப்பகுதியைச் சேதப்படுத்தியுள்ளது. பழத்தின் மேற்பகுதியில் இருந்து பூச்சித் தாக்குதல் ஏற்பட்டிருந்தால், பழங்கள் கீழே விழ வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, பழத்தின் தரம் மோசமாகப் பாதிக்கப்படும் மற்றும் அதனைச் சந்தைப்படுத்தவோ, உண்ணவோ முடியாது.
ஒருங்கிணைந்த நிர்வாகம்: • அழுகி விழுகின்ற பழங்களை வழக்கமான முறையில் சேகரித்து அழிக்கவும். • லார்வாவின் மூலம் உருவாக்கப்படும் வலைகளையும், சேதமடைந்த தண்டுகளையும் அவ்வப்போது வெட்டி அழிக்கவும். • போதுமான காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சத்தை மரங்கள் பெறுவதற்கு வழக்கமான முறையில் மரத்தைக் கத்தரிக்கவும். • ஏப்ரல் முதல் நவம்பர் வரை தோப்பில் ஒளிப் பொறிகளைப் பயன்படுத்தவும். • 10-லிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 10 லிட்டர் தண்ணீரில் 40 கிராம் அளவு போவேரியா பாசியானாவை கலந்து தெளிக்கவும் அல்லது 10 லிட்டர் தண்ணீரில் 5% வேப்பங்கொட்டை கரைசல் 1500 ppm அல்லது or 10-40 மிலி அளவு 10000 ppm கரைசலைக் கலந்து தெளிக்கவும். • தாக்குதல் அதிகமாகும் போது, 10 லிட்டர் தண்ணீரில் 10 மிலி ப்ரோஃபெனோஃபாஸ் 50 EC அல்லது 10 மிலி நோவாலுரான் 10 EC அல்லது 10 மிலி லாம்ப்டா சைஹெலோத்ரின் 5 EC-ஐக் கலந்து தெளிக்கவும். • மருந்து தெளிப்புக்கும், மாம்பழ அறுவடைக்கும் இடையே முறையான இடைவெளியைப் பராமரிக்கவும். டாக்டர். டி. எம். பார்படா, முன்னாள். பூச்சியியல் பேராசிரியர், பி. ஏ. வேளாண்மை கல்லூரி, ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம், ஆனந்த்- 388 110 (குஜராத் இந்தியா) இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
146
1