Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
15 Apr 19, 10:00 AM
ஆலோசனைக் கட்டுரைவிவசாய விழிப்புணர்வு
பசுமைக்குடில் பயிர்செய்கையின் மூலம் உங்கள் விளைச்சலைப் பெருக்கிடுங்கள்!
பசுமைக்குடில் என்பது பாலித்தீன் ஷீட்களின் மூலம் செய்யப்படும் ஒரு கட்டமைப்பு ஆகும். இது வழக்கமாக அரைவட்டம், சதுரம் மற்றும் நீண்ட வடிவில் இருக்கும். காய்கறிகள், பூக்கள் மற்றும் அலங்காரச் செடிகளை வளர்ப்பதற்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக இயற்கை விவசாயத்தை விரும்பிடும் விவசாயிகளுக்கு பசுமைக்குடில் நல்ல பலனளித்திடும்.
பசுமைக்குடிலின் சில நன்மைகள் பின்வருமாறு: • கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையின் கீழ் செடிகள் வளர்க்கப்படுவதால், பயிரிழப்பு அல்லது சேதத்துக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு • குறிப்பிட்ட பருவகாலத்துக்காக காத்திருக்காமல், வருடம் முழுவதும் பயிர்களை வளர்க்கலாம். • பசுமைக்குடிலில் குறைந்தபட்ச பூச்சித்தாக்குதலே ஏற்படும் • வெளிப்புறக் காலநிலையால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படாது •பசுமைக்குடிலில் உயர்தரமான உற்பத்தியைப் பெறலாம் • நல்ல வடிகால் மற்றும் காற்றோட்ட அமைப்பு • பசுமைக்குடில் எந்தக் காலநிலையிலும் சரியான சுற்றுச்சூழல் வசதிகளை செடிகளுக்கு வழங்கிடும் • சுமார் 5 முதல் 10 மடங்கு வரையிலான அதிகரித்த மகசூல் • பயிரிடுதல் காலஅளவு குறைவாக இருக்கும் • உரப் பயன்பாடு எளிதாகிடும் மற்றும் சொட்டுநீர்ப் பாசனத்தின் உதவியுடன் தானாகவே கட்டுப்படுத்தப்படுகிறது ஆதாரம்: கிரிஷி ஜாக்ரன் இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
267
1