Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
01 Feb 19, 11:00 AM
ஆலோசனைக் கட்டுரைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
மண் பரிசோதனைக்கான மண் மாதிரி எவ்வாறு எடுக்க வேண்டும்
சமீப காலங்களில், விவசாயிகள் மண்ணின் நலத்தை புறக்கணிப்பதுக் காணப்படுகிறது. கரிம உரங்கள் பயன்படுத்தாதது மற்றும் ரசாயன உரங்களின் சமநிலையற்ற பயன்பாடும் மண்ணின் உற்பத்தித்திறனைக் குறைத்துள்ளது. எனவே, ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்குப் பிறகும் விவசாயி மண்ணை பரிசோதனை செய்திடச் செய்வது அவசியமாகும். மண்ணின் மாதிரி எப்படி எடுக்க வேண்டும்? • பயிர்களை அகற்றியதற்கு பிறகு அல்லது விதைப்பதற்கு முன் மூன்று மாதங்களில், கரிம மற்றும் ரசாயன உரங்களை பயன்படுத்திதற்கு முன்னர் அல்லது பின்னர், மண் மாதிரியானது எடுக்கப்பட வேண்டும். மண் பரிசோதனைக்கு, 1/2 கிலோ மண் மாதிரி தேவைப்படுகிறது.
• மண் பரிசோதனைக்கு, 8 முதல் 10 இடங்களில் இருந்து மண் மாதிரிகளை ஒரு அலை வடிவிலாக எடுக்கவும். • மண் மாதிரியை எடுக்கும் போது, ஒரு ‘V’ வடிவில் 15 முதல் 20 செ.மீ. அளவிலான குழியை வெட்டி, குழியின் ஒரு பக்கத்திலிருந்து மண்ணை எடுக்கவும். 2 முதல் 3 சென்டிமீட்டர் தடிமனான அடுக்கிலிருந்து மண்ணை எடுக்கவும். • வயலில் 8 முதல் 10 இடங்களில் இருந்து மண் மாதிரிகள் எடுத்த பின்பு, கற்கள், குச்சிகள் மற்றும் குப்பை பொருட்கள் அகியவற்றை நீக்கி மண்ணை சுத்தப்படுத்தவும். • ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் வைத்து அனைத்து மண் மாதிரிகளையும் நன்றாக கலந்து, ஒரு சல்லடை கொண்டு சலித்து, பின்னர் ஒரு பையில் அரை கிலோ மண்ணை எடுக்கவும். விவசாயின் பெயர், கிராம பெயர், மண் மாதிரிகள் எடுக்கப்பட்ட வயலின் கட் எண் ஆகியவற்றை ஒரு தாளில் எழுதவும். மண் மாதிரிப் பையில் அந்த தாளை வைக்கவும் அல்லது ஒட்டவும், பின்னர் பரிசோதனைக்கு அந்த மண்ணை கொடுக்கவும். மண் பரிசோதனைகளின் நோக்கம் - பயிர்கள் பயிரிடுவதற்காக மண்ணில் ஊட்டச்சத்து குறைபாடுகளை சோதித்து, அதை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளைத் தீர்மானிக்க மண் சோதனை அவசியமாகும்.
0
1