AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
19 Apr 19, 11:00 AM
கால்நடை வளர்ப்புஆக்ரோஒன்
பசுந்தீவனம் தயாரிப்பது எப்படி?
1) வைக்கோல் வெட்டியை பயன்படுத்தி தீவனத்தை 1 முதல் 2 இன்ச் நீளத்துக்கு வெட்டிக்கொள்ளவும். 2) பசுந்தீவனத்துக்காக உருவாக்கப்பட்ட குழியின் மீது பிளாஸ்டிக் ஷீட்டை பரப்பவும். 3) 15 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ உப்பு, 2 கிலோ வெல்லம் மற்றும் 1 கிலோ தாது உப்பைக் கலந்து, வெட்டப்பட்ட தீவனத்தின் மீது தெளிக்கவும். தீவன அடுக்குகளை அழுத்தவும். 4) பல அடுக்குகள் கொண்ட தீவனத்தை ஏற்படுத்தி, அவற்றை ஒன்றுடன் ஒன்று சீராகக் கலக்கவும். தீவனத்தை அழுத்தவும். இதனால், அவற்றுக்கு இடையேயுள்ள இடைவெளியில் காற்று நிரம்பாமல் இருக்கும். ஒருவேளை காற்று புகுந்துவிட்டால், தீவனத்தில் பூஞ்சாணம் ஏற்பட்டு, பசுந்தீவனத்தின் தரம் குறைந்துபோகும். 5) குழியை நிரப்பி முடித்த பின்பு, அதனை ஒரு பிளாஸ்டிக் ஷீட்டால் மூடி, அதன்பின் அதனை வைக்கோல் அல்லது காய்ந்த கரும்பு இலைகள் கொண்டு பரப்பி மூடவும். 6) இந்த காற்று புகமுடியாத பசுந்தீவனக் குழியை அப்படியே 40 முதல் 50 நாட்களுக்கு விட்டுவைக்கும் போது, நொதிக்கும் செயல்முறை ஏற்பட்டு நல்ல தரமான பசுந்தீவனம் உருவாக்கப்படும்.
"2) மாடுகளுக்கு அளிக்கப்படும் பசுந்தீவனத்தின் அளவானது, அவற்றின் பால் உற்பத்தியைச் சார்ந்து இருக்கும். BAIF- உருளி காஞ்சன்" இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
6
0