AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
24 Mar 19, 06:00 PM
கால்நடை வளர்ப்புஆக்ரோஒன்
பசுமை தீவனமானது, அதிக உற்பத்தித்திறன் கொண்ட ஆரோக்கியமான கால்நடைகளுக்கு வழிவகுக்கும்
பசுமை மற்றும் சத்துள்ள தீவனங்கள் பசியை அதிகரிப்பதில், மாலைக்கண் நோய் போன்ற பல நோய்களை தடுப்பதில் கால்நடைகளுக்கு உதவுகிறது. • உலர் தீவனத்துடன் ஒப்பிடுகையில் பசுமை தீவனத்தில் நீரின் அளவு அதிகமாக உள்ளது. இந்த தீவனம் சுவையானது; எனவே கால்நடைகள் இதை விரும்பும், தீவனமும் வீணாவதில்லை. • விலங்குகள், பசுமை தீவனத்திலிருந்து எளிதாக குளுக்கோஸ் பெறுகின்றன, இது செரிமானத்திற்கு உதவும். • பசுமை தீவனமானது கனிமங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்ததாக உள்ளது. • பசுமை தீவனமானது ஊட்டச்சத்து நிறைந்ததாக உள்ளது, பசியை அதிகரிக்க உதவுகிறது. • பசுமை தீவனத்தை தினமும் உட்கொள்வது நல்ல, ஆரோக்கியமான கால்நடைகளுக்கு வழிவகுக்கிறது. • இது விலங்கின் உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை ஒரு இயற்கையான வடிவத்தில் வழங்குகிறது.
• இது வைட்டமின் A கரோட்டீனை வழங்கி, மாலைக்கண் நோயை தடுக்கிறது மற்றும் தோலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. • பசுமை தீவனமானது நிறைய கரையக்கூடிய காரணிகளைக் கொண்டிருக்கிறது, எனவே விலங்கானது அதை ஜீரணிக்க என எதுவும் முயற்சிக்க தேவையில்லை. • அர்ஜினைன் மற்றும் குளூடமிக் போன்ற நிறைய அமினோ அமிலங்களை அது கொண்டுள்ளது. • கர்ப்பகாலத்தின் போது விலங்குகள் பசுமை தீவனம் உண்ணாதிருந்தால், பிறந்த கன்று பலவீனமாக, குருடாக அல்லது பிற உடல் குறைபாடுகளோடு இருக்கலாம். • ஒரு சமச்சீரான, ஊட்டச்சத்து நிறைந்த பசுமை தீவனம் வழங்கப்பட்டால், கால்நடையானது குறைந்தது 8 லிட்டர் பால் உற்பத்தி செய்யும். • சிறந்த உற்பத்தி மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கு பசுமை தீவனம் தினசரி உணவில் வழங்கப்பட வேண்டும். சூழல் – ஆக்ரோவன் இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
844
1