Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
28 Apr 19, 06:00 PM
கால்நடை வளர்ப்புஆக்ரோஒன்
கால்நடையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுவதற்கான முதல் உதவி
விலங்குகளின் உடல்கள் பல்வேறு வகை வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்களைக் கொண்டிருக்கின்றன மற்றும் அது பல்வேறு முறைகள் மூலம் அவைகளின் உடலில் நுழைகின்றன. இந்த தொற்று அல்லது நோய் சாதகமான காலநிலை நிலைமைகளில் அதிகரிக்கின்றது. ஒருவர் நோய்அறிகுறிகள் பற்றி அறிந்திருந்தால், இந்த நோய்கள் அல்லது தொற்றுநோய்கள் குணப்படுத்தப்படலாம் மற்றும் பொருளாதார இழப்புகளையும் தடுக்க முடியும். (1) வயிற்று வீக்கம் விலங்குகளின் வயிறு இடதுபுறம் முழுவதும் வீங்கும். கால்நடை அமைதியற்று மற்றும் தீவனம் உண்ணாமல் அல்லது குடிநீர் குடிப்பதை நிறுக்கிறது மற்றும் அசை போடுதலை நிறுத்துகிறது. வயிற்றில் அதிகளவு வாயு அதிகரித்திருந்தால், சுவாசம் பாதிக்கப்பட்டு சில நேரங்களில் அவை வாய் வழியாக மூச்சு விடுகின்றன. இந்த நோய் முக்கியமாக பசும் தீவனத்தின் அதிகப்படியான மற்றும் விரைவான நுகர்வு காரணமாக ஏற்படுகிறது. சிகிச்சை முதலுதவியாக, வயிற்றுப் பகுதியில் இடதுபுறத்தில் மசாஜ் செய்யுங்கள். ஒரு முக்கிய வாயு பிரச்சினை ஏற்படுகையில், ஒரு மருத்துவரை உடனடியாக ஆலோசனை செய்யவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
(2) அஜீரணம் அதிக அளவு தானியங்கள் மற்றும் பழைய உணவை விலங்குகளுக்கு வழங்கினால், அது அஜீரணத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, விலங்குகள் தீவனம் மற்றும் குடிநீர் சாப்பிடுவதைத் நிறுத்துகின்றன, வீக்கம் கண்டறியப்பட்டு, அசைப்போடுதலை நிறுத்திவிடுகிறது. அஜீரண தீவிரமாக இருந்தால், விலங்கு மந்தமாக மற்றும் பலவீனமாகிறது. சிகிச்சை மக்னீசியம் சல்பேட் மற்றும் காஸ்ட்டிக் சோடா ஆகியவற்றை சூடான நீரில் கலந்துக்கொடுக்கவேண்டும் மற்றும் ஒரு மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை கேட்கவேண்டும். மூலம்: ஆக்ரோஒன் இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
290
9