Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
23 May 19, 10:00 AM
குரு க்யான்GOI - Ministry of Agriculture & Farmers Welfare
விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் வழங்கியுள்ள வரத்துப் படைப்புழு மீதான ஆலோசனை
சோளப்பயிரில் ஏற்படும் வரத்துப் படைப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான சில நடவடிக்கைகளை இந்திய விவசாய ஒத்துழைப்பு மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. துளையிடும் பூச்சியான இந்த வரத்துப் படைப்புழுவை சோளப் பயிரில் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்று. தாமதமாக விதைக்கப்படும் விளைநிலங்கள் மற்றும் தாமதமாக முதிரும் கலப்பினங்கள் ஆகியவை இந்த வரத்துப் படைப்புழுவால் அதிகம் பாதிக்கப்படச் சாத்தியமுள்ளது. இலைகளின் மீது இந்த வரத்துப் படைப்புழுக்கள் கூட்டமாகக் கூடி வாழக்கூடியவை மற்றும் இது சோளக் கதிர்களை கடுமையாகப் பாதித்திடும். சோளப் பயிரின் அனைத்து நிலைகளையும் இந்த வரத்துப் படைப்புழு தாக்கக்கூடியது என்பதால், முதல்நிலை லார்வாப் பருவத்தில் செயல்திறனுடன் நிர்வகித்தால் மட்டுமே இவற்றைக் கட்டுப்படுத்த முடியும். சோளக் கதிர்களை இந்தப் பூச்சிகள் தாக்கிவிட்டால், அதன்பின்னர் கட்டுப்படுத்த முடியாது. இந்தப் பூச்சி100-க்கும் மேற்பட்ட பயிர்களைத் தாக்கக் கூடியது. ஆனால், இந்தியாவில் இது சோளப் பயிரை (அதனுடன் பல்வேறு தானியப் பயிர்கள், காய்கறிகள் மற்றும் காட்டுச் செடிகளையும்) தாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகள் வரத்துப் படைப்புழுவின் மூலத்தோற்ற இடமாக அறியப்படுகிறது. அதன்பின்னர் அது தென்மேற்கு நைஜீரியாவிற்கும், பின்னர் ஆப்பிரிக்காவிற்கும் பரவியதாக அறியப்படுகிறது. இந்தியாவில், 2018 மே மாத நடுப்பகுதியில் கர்நாடகாவிலுள்ள ஷிவமோகாவிலும் மற்றும் பின்னர் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு போன்ற பிற மாநிலங்களிலும் பரவியுள்ளது.
சோளப் பயிர்களுக்கு இரவில் உணவூட்டுவது போன்ற ஒருசில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விவசாயிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக, கோடைப்பருவத்தின் தொடக்கத்தில் ஆழமாக உழுவது புழுக்களை உண்ணும் பறவைகளின் கண்களில் கூட்டுப்புழுக்கள் வெளிப்படும்படிச் செய்திடும் மற்றும் நேரடி சூரிய ஒளியையும் அது ஏற்படுத்திடும். இது வரத்துப் படைப்புழுக்களின் அடுத்தடுத்த நிலைகளை மண்ணிலேயே வேரறுத்திடும். அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப சோளப் பயிர்களுக்கு இடையே ஊடுபயிரைப் பயன்படுத்தலாம் (உதாரணத்திற்கு, சோளம் + துவரம் பருப்பு/உளுத்தம் பருப்பு/பச்சைப் பயறு). வயலில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய, ஏக்கருக்கு 5 வீதம் ஃபெரோமோன் பொறிகளை அமைக்கவும். வாராந்திர இடைவெளிகளில் அல்லது பொறியில் பிடிக்கப்படுவதைப் பொறுத்து 3 மாதங்களுக்கு ஒரு பொறி என்ற வீதத்தில் டிரைக்கோகிராமா பிரிடியோசம் அல்லது டெலினோமஸ் ரீமஸை ஏக்கருக்கு 50,000 வீதம் வெளியிடவும். 15-20 நாட்கள் இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 15 லிட்டர் தண்ணீரில் 75கிராம் மேதாரிசியம் அனிசொபிலே பவுடர் கலவை அல்லது 30கிரா பேசில்லஸ் துரிஞ்சீன்சிஸ். வார். குர்ஸ்டாகியை பயன்படுத்தவும். சிறந்த இரசாயன நிர்வாகத்துக்கு, ஒரு கிலோ விதைக்கு 4 மிலி வீதம் சையன்டிரானிபிரோல் 19.8% + தியாமீதாக்சம் 19.8% பயன்படுத்தவும். விதை முளைக்கும் காலகட்டத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் NSKE 5% / அஸாடைராச்டின் 1500ppm 5 மிலி அளவில் தெளிக்கவும். அதன்பின்னர், இலையின் சுற்றுவட்ட அடுக்கு வளர்ச்சியடையும் போது, ஒரு லிட்டர் தண்ணீரில் எமாமாக்டின் பென்சோயேட்0.4 கிராம் அளவில் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் ஸ்பினோசாட் 0.3 மிலி அளவில் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் தையாமீத்தாக்சோம் 12.6% + லாம்டா சைஹாலோத்ரின் 9.5% 0.5 மிலி அளவில் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் குளோராடிரானிபிரோல் 18.5% SC 0.3 மிலி அளவில் தெளிக்கவும். மிகவும் பிந்தைய கட்டத்தில் இவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். எனவே, பூச்சியை ஆரம்பக் கட்டத்திலேயே கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆதாரம்: இந்திய அரசாங்கத்தின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலவாழ்வு அமைச்சகம், விவசாய ஒத்துழைப்பு மற்றும் விவசாயிகள் நலவாழ்வுத் துறை இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
174
17