AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
07 Jun 19, 11:00 AM
ஆலோசனைக் கட்டுரைகிருஷி சந்தேஷ்
மாம்பயிரில் உயர் அடர் நடவு முறைகள்
களிமண் அல்லது அதிகப்படியான மணல் அல்லது சுண்ணாம்புப் பாறைத் தன்மை அல்லது காரத்தன்மை அல்லது தண்ணீர் தேங்கக்கூடிய மண் வகைகளைத் தவிர வேறு மண்களில் பரந்த அளவில் மாமரங்களை வளர்க்கலாம். இதற்கு மண்ணின் பி.ஹெச். அளவு 6.5-லிருந்து 7.5 இருக்கவேண்டும். UHDP-யின் கீழ், 3×2 மீட்டரில் மாமரம் நடவு செய்யப்படுகிறது. இவ்வாறு ஏக்கருக்கு 674 மாமரங்களை நடலாம். நடவு செய்வதற்காக குழியைத் தோண்டுவதற்கு முன்பு, 3×2 மீட்டருக்கு குறியிட்டுக் கொள்ளவேண்டும். அதன்பின்பு குறியிட்ட இடங்களில் 1×1×1 மீட்டர் அளவில் குழியைத் தோண்ட வேண்டும். இதற்கு மாற்றாக, மூன்று மீட்டருக்கு ஒன்று வீதம் ஒரு மீட்டர் ஆழம் மற்றும் ஒரு மீட்டர் அகலமும் கொண்ட குழியைத் தோண்டிக் கொள்ளலாம். இந்தக் குழிகளை நிரப்புவதற்கு முன்பு அவற்றைச் சற்று காற்றாட விட்டுவிட வேண்டும். குழிகளை 40-50 கிலோ மண், 0.5 -1.0 கிலோ SSP, 0.25 கிலோ வேப்பங்கட்டி, 20 கிலோ மக்கிய உரம் மற்றும் 10-15 கிராம் திமெட் கொண்டு நிரப்ப வேண்டும். ஒட்டுமுறை கன்றைப் பயன்படுத்துவதன் மூலம் நடவைச் செய்யவேண்டும். UHDP செயல்முறைக்கு எபிகோடைல் ஒட்டுமுறை பரிந்துரைக்கப்படுகிறது. இதில் மிகவும் தொடக்க நிலையிலேயே மரம் ஏற்படத் தொடங்கிடும். புதிதாக நடவு செய்யப்பட்ட கன்றுகளை மூங்கில் கொண்டு ஆதரவளிக்கவும். UHDP தொழில்நுட்பத்தின் முக்கியமான கூறு அதன் உள்ளீடுகளின் நிர்வாகம்: நீர்ப்பாசனம் மற்றும் உரம், அதுதவிர கிளைகளின் நிர்வாகம். இந்த இரண்டு உள்ளீடுகளும் சொட்டு நீர்ப்பாசன அமைப்புகள் மூலம் வழங்கப்படுகின்றன.
உயர் அடர் நடவு முறைகளுக்கு மாம்பழ வகையினங்கள் ஏற்றவை உயர் அடர் நடவு முறையின் மூலம் நடவு செய்யப்பட்ட வகையினங்கள் மாநில வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன; ஆந்திர பிரதேசம்:- அல்போன்சா, ஆலம்பூர், பானேஷன், தோட்டாபுரி பீஹார்:- போம்பாய், ஹிம்சாகர், லங்காரா, சாவ்சா கோவா:- மன்கோரட் குஜராத்:- அல்போன்சா, கேசர் கர்நாடகா:- அல்போன்சா, பங்களூரா, நீலம், மல்லிகா தமிழ்நாடு:- அல்போன்சா, பங்கனபள்ளி, நீலம் உத்திர பிரதேசம்:- பாம்பே கிரீன், தஷ்ஹாரி, லங்காரா மகாராஷ்டிரா:- அல்போன்சா, கேசர், ரத்னா ஆதாரம்: கிருஷி சந்தேஷ் இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
22
0