Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
22 Aug 19, 10:00 AM
குரு க்யான்ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
கரும்பு ஏரோப்பிளேன் பூச்சிவின் கட்டுப்பாடு
இந்த பூச்சிகள் மிகவும் சுறுசுறுப்பானவை, ஒரு இலையிலிருந்து மற்றொன்றுக்குத் தாவுகின்றன. தொற்று அதிகமாக இருக்கும் பகுதியில், அதிகமான சத்தம் ஏற்படுகிறது. இளம்பூச்சிகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் இலைகளிலிருந்து தாவர இனப்பாலை உறிஞ்சுகின்றன. அவைகளின் உடலில் இருந்து சுரக்கின்ற தேன்துளி போன்ற பொருள் இலைகளில் விழுகிறது. இதன் விளைவாக கரும்பூசண நோய் இலைகளில் உருவாகிறது. அது கரும்புகளின் ஒளிச்சேர்க்கை செயல்பாட்டை பாதிக்கிறது, இதனால் கடுமையாக மகசூல் இழப்பு காணப்படுகிறது. கரும்பு ஏரோப்பிளேன் பூச்சியைக் கட்டுப்படுத்த முக்கியமான மேலாண்மை நடைமுறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன: மேலாண்மை: • வளர்ந்தவைகளால் இடப்பட்ட முட்டைகளை சேகரித்து அழிக்கவும். • 10 லிட்டர் தண்ணீருக்கு 40 கிராம் பூஞ்சை அடிப்படையிலான தூள் மெட்டாஹிஜியம் அனிசோப்லியாவை தெளிக்கவும். • ஒரு ஹெக்டேருக்கு வெளியிட்ட எபிரிகானியா மெலனோலூகா, ஒட்டுண்ணி @ 1 லட்சம் ஒட்டுண்ணிகள் (250 முட்டையடைத் திரள்கள்) அல்லது 2000 பியூபா தெளிக்கவும். • ஒட்டுண்ணிகள் வெளியிட்டப் பகுதி / வயல்களில் எந்த இரசாயன பூச்சிக்கொல்லிகளையும் தெளிக்க வேண்டாம். • ஒட்டுண்ணி செயல்பாடு கவனிக்கப்படாவிட்டால், ஏரோப்பிளேன் பூச்சிகளின் தொற்று நிலத்தில் அதிகமாக இருக்கும், பின்னர் 10 லிட்டர் தண்ணீருக்கு குளோர்பைரிபோஸ் 20 EC @ 20 மில்லி அல்லது மோனோக்ரோடோபாஸ் 36 EC @ 10 மில்லியைக் கலந்து தெளிக்கவும்.
டாக்டர். டி. எம். பார்படா, முன்னாள். பூச்சியியல் பேராசிரியர், பி. ஏ. வேளாண்மை கல்லூரி, ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம், ஆனந்த்- 388 110 (குஜராத் இந்தியா) இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
108
10