AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
08 Aug 19, 10:00 AM
குரு க்யான்ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
நிலக்கடலையில் இலையுண்ணும் கம்பளிப்பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல்
இலையுண்ணும் கம்பளிப்பூச்சி விவசாயச் சமூகத்தில் படைப்புழு என்றும், புகையிலைக் கம்பளிப்பூச்சி என்றும் அழைக்கப்படுகிறது. சூடான வானிலை நிலைமைகளின் கீழ் நீண்டகாலத்திற்கு அதிகளவில் தொற்று காணப்படுகிறது. இலைகளின் குளோரோபில், தாவரத்தின் மென்மையான கிளைகளை சிறிய கம்பளிப்பூச்சிகள் உட்கொள்கின்றன. அதேசமயம் பெரிய லார்வாக்களோ நரம்புகளை விடுத்து இலை முழுவதையும் உட்கொண்டு இலைகளை உதிரச் செய்கின்றன. பகல் நேரங்களில், கம்பளிப்பூச்சிகள் மண்ணில் ஒளிந்துகொண்டு இருக்கும் மற்றும் இரவு நேரங்களில் தீவிரமாக உணவை வேட்டையாடுகின்றன. அவை சில சமயங்களில் மண் பூக்களையும், மண்ணின் அடியில் வளரும் காய்களையும் கூட உட்கொள்கின்றன. கம்பளிப்பூச்சிகளின் பரவல் பயிர்களின் மீது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் அதிகமாக இருக்கும். நிர்வாகம்: • ஏக்கருக்கு 1-15 வீதம் ஃபெரோமோன் பொறிகளை நிறுவவும் • பூச்சித் தாக்குதலின் ஆரம்பக்கட்டத்தில், 500 மிலி (5%) வேப்பங்கொட்டைச் சாறு அல்லது 10 லிட்டர் தண்ணீரில் 40 மிலி வேம்பு அடிப்படையிலான கலவையைத் தெளிக்கவும் • 40 கிராம் அளவில் பூஞ்சை அடிப்படையிலான பொடியான பூவேரியா பாசியானா அல்லது பாக்டீரிய அடிப்படையிலான பொடியான பேசில்லஸ் துரிஞ்ஜீனிசிஸை 10 லிட்டர் தண்ணீரில் தெளிக்கவும். • நியூக்ளியர் பாலிஹெட்ரோசிஸ் வைரஸை (NPV) ஒரு ஹெக்டேருக்கு LE 250 LE (இலையுண்ணும் கம்பளிப்பூச்சிக்கு) முதல் 450 LE வரை (நெற்றுத் துளைப்பான்) தெளிக்கவும் • இலையுண்ணும் கம்பளிப்பூச்சியின் தாக்குதல் மிகவும் அதிகமாக இருந்தால், மீத்தோமைல் 50 WP மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 12.5 கிராம் வீதம் கலந்து தெளிக்கவும் • பூச்சிக்கொல்லிகளின் செயல்திறனை அதிகரிப்பதற்கு கரைசலுடன் வெல்லத்தையும் சேர்க்கலாம்
டாக்டர். டி. எம். பார்படா, முன்னாள். பூச்சியியல் பேராசிரியர், பி. ஏ. வேளாண்மை கல்லூரி, ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம், ஆனந்த்- 388 110 (குஜராத் இந்தியா) இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
184
8