Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
07 Jul 19, 06:00 PM
கால்நடை வளர்ப்புwww.vetextension.com
பருவமழையின் போது பலனளிக்கும் கால்நடைப் பராமரிப்பு உதவிக்குறிப்புகள்
பருவகாலத்தின் சாத்தியமான பெரும் நன்மைகளின் மத்தியில், கால்நடைப் பராமரிப்பாளர்கள் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளன. மழைக்காலத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், பல நோய்கள் ஏற்பட்டு அதன் விளைவாக கால்நடைகள் இறந்து போகலாம். கால்நடைகளின் ஆரோக்கியத்தைச் சிறந்த முறையில் பராமரிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்வருமாறு: • தண்ணீர் சொட்டக் கூடிய மேற்கூரையை சரிசெய்யவும் • போதுமான காற்றோட்டத்தைப் பராமரிக்கவும் • வயிற்றுப் புழுக்களில் இருந்து கால்நடைகளைப் பாதுகாப்பதற்கு மருந்தளிக்கவும் • கொசுக்கள் மற்றும் ஈக்கள் பரவுவதைத் தடுக்கவும் • ஈரமில்லாத உலர்ந்த இடத்தில் கால்நடை உணவைச் சேமிக்கவும் • கால்நடைகளின் உடலைச் சோதித்து, பால் கறந்த பின்னர் ஆன்டிசெப்டிக் கொண்டு பால்மடியைக் கழுவவும் • பினாயில் கொண்டு கொட்டகையை அடிக்கடி சுத்தம் செய்யவும் • ஒவ்வொரு கால்நடைக்கும் இடையே போதுமான இடைவெளியை விடவும் • கால்நடைகளின் உடலில் ஏற்படக்கூடிய எந்தவிதமான காயங்களையும் சிறப்புக் கவனம் எடுத்து, ஆன்டிசெப்டிக் போட்டு பராமரிக்கவும் • அதிகப்படியான பசும் புற்கள் அல்லது இலைகளை உண்பதற்கு கால்நடைகளை அனுமதிக்காதீர்கள். அது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக் கூடும் • சிறந்த வளர்சிதை மாற்றத்தை உறுதிசெய்ய சமச்சீரான தீவனத்தை வழங்கவும் • கால்நடைகளின் கழிவுகள், சிறுநீர் போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்தவும். இல்லையென்றால், அது நோய்களைப் பரவச் செய்திடும் • நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை, ஆரோக்கியமான கால்நடைகளில் இருந்து தனித்து வைக்கவும் • நோயெதிர்ப்புத் திறனை ஊக்குவிக்க எதிர்ப்புத் திறனூக்கி கொடுக்கப்பட வேண்டும் ஆதாரம்: www.vetextension.com
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
417
0