AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
19 May 19, 06:00 PM
கால்நடை வளர்ப்புகுஜராத் கால்நடை மேம்பாட்டு வாரியம் (காந்திநகர்)
விலங்குகளில் செயற்கைக் கருவூட்டலும் அதன் நன்மைகளும்
செயற்கைக் கருவிகள் மற்றும் அறிவியல் செயல்முறைகளின் உதவியுடன் ஆண் விலங்கிடமிருந்து உயர்தரமான விந்தணுவைச் சேகரித்து, அறிவியல் உபகரணங்களின் உதவியுடன் பெண் விலங்கின் இனப்பெருக்கப் பாதையில் அவற்றை வைப்பதே செயற்கைக் கருவூட்டல் எனப்படுகிறது. நன்மைகள்: ● நமது நாட்டில் பெருமளவிலான கால்நடைகள் உள்ளன. ஆனால் இனப்பெருக்கத் திறன் கொண்ட காளைகள் குறைவாகவே உள்ளன. எனவே, இனப்பெருக்கத் திறன் கொண்ட பல விலங்குகளை இனப்பெருக்கம் செய்வதற்கு ஒரு காளையை பயன்படுத்தி செயற்கைக் கருவூட்டல் செய்வது ஒரு நல்ல வழிமுறையாகும். ● பசுக்கள் மற்றும் எருமைகளில் உள்ள பல்வேறு மரபியல் ரீதியான நோய்களைக் கண்டறிவதில் இது உதவுகிறது. ● இந்த நோக்கத்துக்காக ஆரோக்கியமான காளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றில் நோய்கள் ஏதும் உள்ளதா என்று வழக்கமான முறையில் பரிசோதிக்கப்படுகிறது. இது இனப்பெருக்க நோய்களைத் தடுப்பதில் உதவுகிறது. ● 5-8 போன்ற சிறிய அளவிலான கால்நடைகளைக் கொண்ட விவசாயிகளுக்கு காளையை வளர்ப்பது சாத்தியமான காரியமில்லை. இருந்தாலும் அவர்களால் நியாயமான கட்டணத்தில் இந்த வசதியைப் பெற முடியும்.
● கலப்பில்லாத இனத்தின் உயர் இனப்பெருக்கத் திறன் கொண்ட ஒரு காளையின் மூலம்இனப்பெருக்கம் செய்து பால் உற்பத்தியை கணிசமான அளவில் அதிகரிக்க முடியும். ● ஒரு காளையைக் கொண்டு 100-லிருந்து 200 விலங்குகளை கருவூட்ட இயலும். ● உறைய வைத்த விந்தணுவை ஒருசில வருடங்கள் வரை திரவ நைட்ரஜனில் சேமிக்கலாம். மேலும் அந்தக் காளை இறந்த பின்பும் கூட இனப்பெருக்கத்துக்காக அதனைப் பயன்படுத்தலாம். பார்வைக்குறிப்பு: குஜராத் கால்நடை மேம்பாட்டு வாரியம் (காந்திநகர்) இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
396
28