Looking for our company website?  
ராஜசேகரன்
Ramapuram, Tamil Nadu
15 Sep 19, 07:17 AM

வணக்கம் ஐயா, நான் ஏலக்கி ரக வாழை பயிர் செய்துள்ளேன், சொட்டுநீர் பாசன முறையில் நீர் பார்க்கிறேன், வாழை கன்று பயிர் செய்து ஒரு மாதம் ஆகிய காலங்களில் நோய் மற்றும் பூச்சி தாக்கிய உள்ளது இதற்கான தீர்வு என்ன

2
0
1
1
കമന്റുകൾ (1)
அக்ரோஸ்டார் அக்ரிடாக்டர்
Tamil Nadu
19 Sep 19, 09:20 AM

​வணக்கம் ராஜசேகரன் ஐயா. உங்கள் வாழை செடி பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய தற்போது கலப்பு மருந்து (காசுகமைசின் 5% + காப்பர் ஆக்சி குளோரைடு 45% டபிள்யு.பி) @ 500 கிராம்/ ஏக்கர் என்ற அளவில் சொட்டுநீர் பாசனத்தில் கொடுக்கவும். பிறகு 2 நாட்கள் கழித்து opera--கலப்பு மருந்து (பைரகிலோஸ்ட்ரோபின் 13.3% + எப்பாக்சிகோனசோல் 5% எஸ்.ஈ) (Pyraclostrobin 13.3% + Epoxyconazole 5% SE) @ 40 மில்லி/ 15 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும். பிறகு உங்கள் வாழை செடி நன்கு செழிப்பாக வளர 19:19:19 என்ற உரம் 6 கிலோ, சிலேட்டட் மைக்ரோ நியூட்ரியண்ட்1 கிலோ மற்றும் யூமிக் பவுடர் 500 கிராம்/ ஏக்கர் என்ற அளவில் கலந்து சொட்டுநீர் பாசனத்தில் கொடுக்கவும். இந்த மருந்துகள் அனைத்தையும் கொடுக்கும்பொழுது உங்கள் செடியில் உள்ள நோயினை கட்டுப்படுத்த நன்கு செழிப்பாக வளர செய்யலாம். மேலும் உங்கள் செடியில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் எங்களிடம் உங்கள் கேள்விகள் அல்லது செடியின் புகைப்படங்களை பதிவு செய்யுங்கள். அக்ரோஸ்டார் உங்களுக்கு சிறந்த முறையில் உதவ உள்ளோம் மற்றும் உங்கள் மற்ற விவசாய நண்பர்களுக்கு இந்த ஆப்பை பகிருங்கள். நாங்கள் விவசாய நண்பர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறோம். அக்ரோஸ்டாரை நாடியமைக்கு நன்றி ஐயா. அக்ரி டா.பிரவீன்.

0
0