Looking for our company website?  
R
R.VIJAYANARAYANAN
Tamil Nadu
18 Aug 19, 04:22 PM

RVN.MOORTHY. மதுரை. தென்னையில் வண்டு புழு தாக்கியுள்ளது,கட்டுப்படுத்த இயற்கைமுறை ஆலோசனை தேவை.

4
0
1
2
ಕಾಮೆಂಟುಗಳು (1)
அக்ரோஸ்டார் அக்ரிடாக்டர்
Tamil Nadu
19 Aug 19, 10:00 AM

வணக்கம் விஜயநாராயணன் ஐயா, அக்ரோஸ்டார் உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்கள் தென்னை மரம் காண்டாமிருக வண்டினால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த இயற்கை முறையில் விளக்கு பொறிகளை தோப்புக்குள் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம். மழைக் காலங்களில் முதல் மழையினைத் தொடர்ந்து விளக்கும் பொறிகளை அமைப்பதன் மூலம் வளர்ந்த வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.ஒரு மண்பானையில் 5 லி நீருடன் 1 கி.கி அமணக்கு புண்ணாக்கு சேர்த்த கலவையை தோப்பினில் வைத்தும் கவர்ந்து அளிக்கலாம். வேப்பங்கொட்டை தூளையும், மணலையும் 1.2 என்ற விகிதத்தில் கலந்து, மரம் ஒன்றிற்கு 150கிராம் வீதம் நடுக்குருத்தின் 3 மட்டை இடுக்குகளில் வைத்து இந்த வண்டுகளை கட்டுப்படுத்தலாம். அல்லது ரினோலியூர் எனும் இனக்கவர்ச்சிப் பொறியினை 3/ ஏக்கர் என்ற வீதத்தில் வைக்கலாம். இந்த இனக்கவர்ச்சி பொறிகளை அமைப்பதனால் மற்ற முறையைக்காட்டிலும் சிறந்த முறையில் இந்த வடுக்களை கட்டுப்படுத்தலாம். மேலும் உங்கள் செடியில் உள்ள சாறு உறிஞ்சும் பூச்சியினை கட்டுப்படுத்தினாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வது மிகவும் கடினமாகும். மேலும் உங்களுக்கு விவசாயம் பற்றிய தகவல்களை அறிய, இந்த ஆப்பில் உங்கள் கேள்விகள் அல்லது செடியின் புகைப்படங்களை பதிவு செய்யவும் மற்றும் இந்த ஆப்பை உங்கள் மற்ற விவசாய நண்பர்களுக்கு பகிருங்கள். நாங்கள் விவசாய நண்பர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறோம். அக்ரோஸ்டாரை நாடியமைக்கு நன்றி ஐயா. அக்ரி டா.பிரவீன்.